படா பாக்
படாபாக் அல்லது பெருந்தோட்டம் (Bada Bagh), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் அமைந்த ஜெய்சல்மேர் நகரத்தில் உள்ள அரண்மனை தோட்டம் மற்றும் மன்னர்களின் நினைவு மண்டபங்களின் தொகுதி ஆகும். இது ஜெய்சல்மேர் நகரத்திற்கு வடக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பெரும் தோட்டத்தை ஜெய்சல்மேர் இராச்சிய மன்னர் இரண்டாம் ஜெயித் சிங் நிறுவினர். கிபி 18ஆம் நூற்றாண்டில் மறைந்த ஜெய்சல்மேர் இராச்சிய மன்னர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் கல்லறை நினைவு மண்டங்கள் இப்பெருந்தோட்டத்தில் நிறுவப்பட்டது.[1][2][3] வரலாறுசாகம்பரியின் சௌகான்கள் மரபில் வந்த இரண்டாம் ஜெய்த் சிங் (1497–1530) ஜெய்சல்மேர் இராச்சியத்தை நிறுவினார். ஒரு சிறு குன்றில் படாபாக் எனப்படும் பெருந்தோட்டம் அருகே அழகான ஏரியை வெட்டி அமைத்தார். மேலும் தோட்டத்தில் இறந்த அரசர், அரசி, இளவரசர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகள் மேல் நான்கு வகையான பளிங்குக் கல்லால் நினைவு மண்டபங்கள் நிறுவினார்.[4] படக்காட்சிகள்இதனையும் காண்கமேற்கோள்கள்
26°57′18″N 70°53′13″E / 26.955°N 70.887°E வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia