சாக்தக
சாக்தக (Chakdaha), கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்த நதியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான கிருஷ்ணாநகர் நகரத்திற்கு தெற்கே 41 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடக்கே 68 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 21 வார்டுகளும், 23,167 வீடுகளும் கொண்ட சாக்தக நகரத்தின் மக்கள் தொகை 95,203 ஆகும். அதில் ஆண்கள் 48,047 மற்றும் பெண்கள் 47,156 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 986 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7.64% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 90.80% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 98.76%, இசுலாமியர் 0.87% மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.[2] கல்விபோக்குவரத்து![]() சியால்டா-ராணாகட் நகரங்களை இணைக்கும் இருப்புப் பாதையில் சாக்தக இரயில் நிலையம் உள்ளது.[5] இதனருகமைந்த வானூர்தி நிலையம் 58 கிலோ மீட்டர் தொலைவில் டம் டம் நகரத்தில் உள்ள நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia