தயா கமகே
தயா தர்மபால கிலித்துவ கமகே (Daya Dharmapala Kilittuwa Gamage, பிறப்பு:15 செப்டம்பர் 1960) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தயா கமகே 2008 மே 10இல் நடைபெற்ற 1வது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாணசபை உறுப்பினரானார்.[1][2] இவர் முதலாவது கிழக்கு மாகாணசபையில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார்.[3] இவர் 2012 செப்டெம்பர் 8இல் நடைபெற்ற 2வது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5] இவர் ஐதேக வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் போட்டியிட்டு 70, 201 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[6][7][8] இவர் 2015 செப்டம்பர் 4 அன்று ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9][10][11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia