லக்கி ஜெயவர்தன
லக்கி ஜெயவர்தன (Lucky Jayawardena, 1955 – 8 சனவரி 2025)[1][2] என அழைக்கப்படும் ஹேரத் முதியான்சிலாகே லக்கி திசாநாயக்க ஜயவர்தன இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1980களில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார். 1988 மாகாணசபைத் தேர்தலில் கண்டி மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1993 தேர்தலில் மீண்டும் தெரிவு செய்யப்பட்ட இவர் மாகாண அமைச்சராக நியமிக்கப்பட்டார். லக்கி ஜயவர்தன இலங்கை நாடாளுமன்றத்திற்கான 1994,[3] 2000,[4] 2001[5] தேர்தல்களில் கண்டி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். 2001 இல் நில, மற்றும் நில ஆவணங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2004 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[6] 2004 மாகாணசபைத் தேர்தலில் கண்டியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7] 2015 வரை கண்டி மாகாணசபை உறுப்பினராக இருந்தார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 67,461 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[8][9][10][11] இவர் இலங்கையின் அமைச்சரும் ஆவார்.[12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia