தித்திவங்சா
தித்திவங்சா (ஆங்கிலம்: Titiwangsa; மலாய்: Titiwangsa) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான இடமாகும். கோலாலம்பூர் மாநகரத்தின் பழைய முக்கிய்மான கட்டிடங்கள் இங்குதான் உள்ளன. கோலாலம்பூர் மருத்துவமனை தித்திவாங்சாவுக்கு தெற்கே அமைந்துள்ளது. தித்திவங்சா மக்களவைத் தொகுதி, பெக்கெலிலிங், கம்போங் பாரு, தித்திவாங்சா ஏரிப் பூங்கா மற்றும் டத்தோ கெராமாட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. கோலாலம்பூர் மாநகரின் வடகிழக்குப் புறநகரில் குவாந்தான் சாலையில் அமைந்துள்ள பல முக்கியப் பகுதிகளில் தித்திவங்சாவும் ஒன்றாகும். இங்குதான் தித்திவங்சா ஏரிப் பூங்காவும் உள்ளது. 1960-ஆம் ஆண்டுகளில், கோலாலம்பூர் தனிக் கூட்டாசிப் பகுதியாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், கோலாலம்பூரில் இருந்து பகாங் மாநிலத்தின் தலைநகர் குவாந்தான் நகருக்கு, குவாந்தான் சாலையில் தான் செல்வார்கள். அதனால்தான் இந்தச் சாலைக்கு ஜாலான் குவாந்தான் என்று பெயர் வந்தது. வரலாறுதித்திவங்சா பகுதியில் ஒரு பெரிய மத்திய ஏரி உள்ளது. அதுதான் இந்த தித்திவங்சா ஏரி. பிரித்தானிய ஆட்சியின் கீழ் இங்கு ஈயச் சுரங்க நடவடிக்கைகள் மிகையாக நடைபெற்றன. பின்னர் அந்த ஈயக் குட்டைகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு ஒரு பெரிய பூங்காவாக மாற்றப்பட்டது.[1] தித்திவாங்சா ஏரிப் பூங்கா 46.13 எக்டேர் அல்லது 114 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.[2] சுற்றுலா தலங்கள்
தித்திவாங்சா காட்சியகம்மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia