பர்தியா மாவட்டம்![]() பர்தியா மாவட்டம் (Bardiya District) (நேபாளி: बर्दिया जिल्लाⓘ), மத்திய மேற்கு நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மாநில எண் 5-இல் அமைந்த 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் குலரியா நகரம் ஆகும். பர்தியா மாவட்டத்தின் பரப்பளவு 2,025 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 4,26,576 ஆகும். [1] அமைவிடம்மத்திய மேற்கு நேபாளத்தில் மாநில எண் 5-இல், 2025 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த பர்தியா மாவட்டம், பாங்கே மாவட்டத்தின் மேற்கிலும், நேபாள மாநில எண் 6-இல் உள்ள சுர்கேத் மாவட்டத்தின் தெற்கிலும், நேபாள மாநில எண் 7-இல் உள்ள கைலாலி மாவட்டத்தின் கிழக்கிலும் அமைந்துள்ளது. பர்தியா மாவட்டத்தின் தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பகுதியின் லக்கிம்பூர் கேரி மாவட்டம் மற்றும் பகராயிச் மாவட்டங்கள் உள்ளது. புவியியல் மற்றும் தட்ப வெப்பம்பர்தியா மாவட்டத்தின் பெரும் பகுதிகள் தெராய் சமவெளியில் உள்ளதால், வேளாண்மை மற்றும் காடு வளர்ப்பு நன்கு உள்ளது. பர்தியா மாவட்டத்தின் வடக்கில், சிவாலிக் மலைகளில் அமைந்த பர்தியா தேசியப் பூங்கா 968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. பர்தியா மாவட்டத்தில் கர்னாலி ஆறு பாய்கிறது. இவ்வாற்றில் காணப்படும் அரிய மீன் டால்பின்கள் அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது.[2]
பர்தியாவின் வடக்கில் உள்ள காடுகளில் தாரு இன பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மீன் பிடித்தல் இவர்களது முக்கியத் தொழில் ஆகும். நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி சபைகள்![]() பர்தியா மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளும், முப்பத்தி மூன்று கிராம வளர்ச்சி மன்றங்களும் உள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia