பாங்கே மாவட்டம்![]() பாங்கே மாவட்டம் (Banke District) (நேபாளி: बाँके जिल्लाⓘ, மத்திய மேற்கு நேபாளத்தின் மாநில எண் 5-இல் உள்ள பனிரெண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் நேபாள்கஞ்ச் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,337 சதுர கிலோ மீட்டர்கள் கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் மக்கள் தொகை 491313 ஆகும். [1] இம்மாவட்ட மக்கள் அவதி மொழி, நேபாளி மொழி மற்றும் உருது மொழி பேசுகின்றனர். நேபாள்கஞ்ச், கோஹால்பூர் மற்றும் கஜுரா பஜார் இம்மாவட்டத்தின் மூன்று முக்கிய நகரங்கள் ஆகும். புவியியல் மற்றும் தட்ப வெப்ப நிலைபாங்கே மாவட்டத்தின் தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிராவஸ்தி மாவட்டம் மற்றும் பகராயிச் மாவட்டங்கள் எல்லையாக அமைந்துள்ளது. பாங்கே மாவட்டத்தின் பெரும்பகுதிகள் மேற்கு ரப்தி ஆற்றின் நீரால் வளமையாக உள்ளது.
நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி சபைகள்![]() பாங்கே மாவட்டத்தில் நாற்பத்தி ஐந்து கிராம வளர்ச்சி சபைகளும், மூன்று நகராட்சிகளும் உள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia