பிரசியோடைமியம்(III) குளோரைடு
பிரசியோடைமியம்(III) குளோரைடு (Praseodymium(III) chloride) என்பது PrCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற இலந்தனைடு முக்குளோரைடுகளைப் போலவே, இதுவும் நீரற்ற மற்றும் நீரேற்று வடிவங்களில் காணப்படுகிறது. நீல-பச்சை நிறத்தில் திண்மப் பொருளாக இருக்கும் இச்சேர்மம் ஈரமான காற்றில் வெளிப்படும் போது தண்ணீரை விரைவாக உறிஞ்சி வெளிர் பச்சை நிற எழுநீரேற்றை உருவாக்குகிறது. தயாரிப்புபிரசியோடைமியத்துடன் ஐதரசன் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம்(III) குளோரைடு உருவாகும்:[1][2]
பிரசியோடைமியம்(III) குளோரைடு பொதுவாக வெற்றிடப் பதங்கமாதல் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.[3] பிரசியோடைமியம்(III) குளோரைடின் நீரேற்றப்பட்ட உப்புகளை பிரசியோடைமியம் உலோகம் அல்லது பிரசியோடைமியம்(III) கார்பனேட்டை ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கலாம்:
PrCl3∙7H2O ஒரு நீருறிஞ்சும் பொருளாகும். ஈரமுலர்த்தியில் உலர்த்தப்படும்வரை இது படிகமாக மாறாது. அம்மோனியம் குளோரைடு பாதை என்று அழைக்கப்படும் அம்மோனியம் குளோரைடு முன்னிலையில் 400 °செல்சியசு வெப்பநிலையில் நீரேற்றை வெப்ப நீரிழப்பு செய்வதன் மூலம் நீரிலி பிரசியோடைமியம்(III) குளோரைடை உருவாக்கலாம்.[3][4][5] மாறாக நீரேற்றை தயோனைல் குளோரைடைப் பயன்படுத்தியும் நீர்நீக்கம் செய்யலாம்.[3][6] வினைகள்பிரசியோடைமியம்(III) குளோரைடு இலூயிசு அமிலமாகும். கடின மற்றும் மென்மையான (இலூயிசு) அமிலங்கள் மற்றும் காரங்கள் கோட்பாட்டின் படி இது கடினமானது என வகைப்படுத்தப்படுகிறது. நீரேற்றை விரைவாக சூடுபடுத்தினால் சிறிய அளவிலான நீராற்பகுப்பை ஏற்படுத்தும்.[3] பிரசியோடைமியம்(III) குளோரைடானது பொட்டாசியம் குளோரைடுடன் வினைபுரிவதன் மூலம் ஒரு நிலையான இலூயிசு அமில-கார அணைவு (K2PrCl5) சேர்மத்தை உருவாக்குகிறது. இச்சேர்மம் சுவாரசியமான ஒளியியல் மற்றும் காந்தப் பண்புகளை காட்டுகிறது.[1] கரையாத பிரசியோடைமியம்(III) சேர்மங்களைத் தயாரிக்க பிரசியோடைமியம்(III) குளோரைடின் நீர் கரைசல்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, பிரசியோடைமியம்(III) பாசுபேட்டு மற்றும் பிரசியோடைமியம்(III) புளோரைடு உப்புகளை முறையே பொட்டாசியம் பாசுபேட்டு மற்றும் சோடியம் புளோரைடு ஆகியவற்றுடன் வினை புரியச் செய்வதன் மூலம் தயாரிக்கலாம்:
கார உலோக குளோரைடுகளுடன் சேர்த்து சூடாக்கப்படும் போது MPr2Cl7, M3PrCl6, M2PrCl5, and M3Pr2Cl9 இங்குள்ள M = K, Rb, Cs.[7] ஆகிய மூலக்கூற்று வாய்ப்பாடுகளைக் கொண்ட மும்மை (மூன்று வெவ்வேறு கூறுகளைக் கொண்ட சேர்மங்கள்) பொருட்களை உருவாக்குகிறது. ![]() மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
|
Portal di Ensiklopedia Dunia