பிரசியோடைமியம்(IV) புளோரைடு
பிரசியோடைமியம்(IV) புளோரைடு (Praseodymium(IV) fluoride) என்பது PrF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. புளோரின் மற்றும் |பிரசியோடைமியத்தின் உயர் ஆக்சிசனேற்ற உப்பாக இது அறியப்படுகிறது. இளம் மஞ்சள் நிற படிகங்களாக பிரசியோடைமியம்(IV) புளோரைடு உருவாகிறது. தயாரிப்புபிரசியோடைமியம்(IV) ஆக்சைடின் மீது கிரிப்டான் இருபுளோரைடை செலுத்தும்போது பிரசியோடைமியம்(IV) புளோரைடு ஒரு படிகத் திண்மமமாக உருவாகிறது.:[1] சோடியம் அறுபுளோரோபிரசியோடைமேட்டு(IV) சேர்மத்தை நீர்ம ஐதரசன் புளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பிரசியோடைமியம்(IV) புளோரைடு உருவாகிறது:[2] பண்புகள்இளம் மஞ்சள் நிற படிகங்களாக பிரசியோடைமியம்(IV) புளோரைடு காணப்படுகிறது. யுரேனியம் டெட்ராபுளோரைடு (UF4) போன்ற எதிர்கனசதுரக் கட்டமைப்பில் படிகங்கள் காணப்படுகின்றன. வெப்பப்படுத்தும்போது பிரசியோடைமியம்(IV) புளோரைடு சிதைவடைகிறது. நான்கு இணைதிறன் பிரசியோடைமியம் நேர்மின் அயனிகள் காரணமாக (Pr3+ / Pr4+: +3.2 V) அதிக பிராசோடைமியம்(IV) புளோரைடு நீரில் சிதைந்து ஆக்சிசனை வெளியிடுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia