பிரசியோடைமியம்(III) சல்பேட்டு (Praseodymium(III) sulfate) என்பது Pr2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். மணமற்ற வேதிப் பொருளாக வெண்-பச்சை நிறத்தில் படிகமாக இது காணப்படுகிறது. கலவை ஆகும். நீரற்ற பிரசியோடைமியம்(III) சல்பேட்டு தண்ணீரை எளிதில் உறிஞ்சி ஐந்துநீரேற்று மற்றும் எண்ணீரேற்று சேர்மங்களாக உருவாகிறது.[1]
பண்புகள்
பிரசியோடைமியம்(III) சல்பேட்டு சாதாரண நிபந்தனைகளில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. உயர்ந்த வெப்பநிலையில், இது படிப்படியாக தண்ணீரை இழந்து வெண்மையாக மாறும். அனைத்து அருமண் சல்பேட்டுகளைப் போலவே, இதன் கரைதிறனும் வெப்பநிலைக்கேற்ப குறைகிறது. இப்பண்பு ஒருகாலத்தில் மற்ற அருமண் சேர்மங்களிலிருந்து இதை பிரிக்கப் பயன்படுத்தப்பட்டது
ஐந்துநீரேற்று மற்றும் எண்ணீரேற்று ஆகியவை முறையே 3.713 மற்றும் 2.813 கி/செ.மீ3அடர்த்தியைக் கொண்டு ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்புகளைக் கொண்டுள்ளன. எண்ணீரேற்றுப் படிகங்கள் nα = 1.5399, nβ = 1.5494 மற்றும் nγ = 1.5607 ஆகிய ஒளிவிலகல் குறியீட்டு கூறுகளுடன் ஒளியியல் ரீதியாக ஈரச்சு படிகங்களாக உள்ளன. C12/c1 (எண். 15) என்ற இடக்குழுவில் a = 1370.0 (2) பைக்கோமீட்டர், b = 686.1(1) பைக்கோமீட்டர், c = 1845.3(2) பைக்கோமீட்டர், β = 102.80(1)° மற்றும் Z = 4. என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் இது படிகமாகிறது.[3]
தயாரிப்பு
ஈரமான பிரசியோடைமியம்(III) ஆக்சைடு தூளை கந்தக அமிலத்தைச் சேர்த்து கரைத்தால் எண்ணீரேற்று பிரசியோடைமியம்(III) சல்பேட்டு படிகங்கள் உருவாகின்றன. கரிம இரசாயனங்கள் அடங்கிய சில ஆவியாதல்/கரைதல் படிகளைச் சேர்ப்பதன் மூலம் இந்த செயல்முறையை மேம்படுத்தலாம்.[3]
↑ 3.03.1Y.-Q. Zheng, Y.-J. Zhu and J.-L. Lin (2002). "Redeterminaton of the crystal structure of praseodymium sulfate octahydrate, Pr2(SO4)3·8H2O". Zeitschrift für Kristallographie – New Crystal Structures217: 299–300. doi:10.1524/ncrs.2002.217.jg.299.PDF copy