பிரசியோடைமியம் அறுபோரைடு (Praseodymium hexaboride) என்பது PrB6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். பிரசியோடைமியம் எக்சாபோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பிரசியோடைமியமும்போரானும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. கருப்பு நிறப் படிகங்களாக பிரசியோடைமியம் அறுபோரைடு தோன்றுகிறது. இது தண்ணிரில் கரையாது.
தயாரிப்பு
விகிதவியல் அளவுகளில் பிரசியோடைமியத்தையும் போரானையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம் அறுபோரைடு உருவாகும்.
Pr + 6B -> PrB6
பண்புகள்
பிரசியோடைமியம் அறுபோரைடு Pm3m என்ற இடக்குழுவில், a = 0.4129 நானோமீட்டர், Z = 1 என்ற செலளவுருக்களுடன் கனசதுர படிக அமைப்பில் கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது. கால்சியம் அறுபோரைடுடன் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது.[2] பிரசியோடைமியம் அறுபோரைடு 2610 °செல்சியசு வெப்பநிலையில் முற்றொருமித்து உருகும்.[3] 7 கெல்வினுக்கும் குறைவான வெப்பநிலையில், இச்சேர்மத்தில் ஓர் எதிர்ப்பு காந்த நிலைக்கான காந்த மாற்றம் ஏற்படுகிறது.[4][5][6] இது தண்ணீரில் கரையாது.
பயன்
பிரசியோடைமியம் அறுபோரைடு உயர் சக்தி மின்னணு சாதனங்களின் நேர்மின்வாய்களுக்கான உலோகக் கலவைகளின் ஓர் அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது
↑H. Hacker Jr., Y. Shimada, K. S. Chung (1971). Magnetic properties of CeB6, PrB6, EuB6, and GdB6. 4 (Physica Status Solidi (a) ). பக். 459–465. doi:10.1002/pssa.2210040221.