பிரசியோடைமியம்(III) செலீனேட்டு
பிரசியோடைமியம்((III)) செலீனேட்டு (Praseodymium(III) selenate) Pr2(SeO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியத்தின் செலீனிய உப்பு என வகைப்படுத்தப்படும் இந்த உப்பு பிரசியோடைமியமும் செலீனிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது. தயாரிப்புபிரசியோடைமியம்(III) ஆக்சைடு சேர்மத்தை செலீனிக் அமிலக் கரைசலில் கரைத்து வினைபுரியச் செய்வதால் பிரசியோடைமியம்((III)) செலீனேட்டு உருவாகிறது:[3] பண்புகள்பிரசியோடைமியம்(III) செலீனேட்டு தண்ணீரில் கரைந்து, நீரேற்றம் செய்யும்போது பச்சை நிற படிகங்களை உருவாக்குகிறது. இந்த படிகங்கள் Pr2(SeO4)3·nH2O என்ற வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவ்வாய்ப்பாட்டிலுள்ள n = 4, 5, 7, 8 மற்றும் 12 என்ற மதிப்புகளை ஏற்கிறது. குளிர்ந்த கரைசல்களிலிருந்து படிகமயமாக்கல் நிகழும்போது எண்ணீரேற்று உருவாகிறது, மேலும் சூடான கரைசல்களிலிருந்து படிகமயமாக்கல் நிகழும்போது ஐந்துநீரேற்றுகள் உருவாகின்றன. பொட்டாசியம் செலீனேட்டுடனும் மற்ற பிற செலீனேட்டு உப்புகளூடனும் வினைபுரியும்போது பிரசியோடைமியம்((III)) செலீனேட்டு Pr2(SeO4)3·nK2SeO4·4H2O (n = 1 மற்றும் 3) போன்ற இரட்டை உப்புகளை உருவாக்குகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia