பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு
பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு (Praseodymium(V) oxide nitride) என்பது PrNO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டினால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தில் பிரசியோடைமியம் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. பிரசியோடைமியம் உலோகமும் நைட்ரிக் ஆக்சைடும் திண்ம நியான் முன்னிலையில் 4 கெல்வின் வெப்பநிலையில் வினைபுரிந்து பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு உருவாகிறது. பிரசியோடைமியம் நைட்ரசன் அணுக்களுடன் முப்பிணைப்பும், ஆக்சிசன் அணுக்களுடன் இரட்டைப் பிணைப்பும் கொண்ட நேர்கோட்டு படிகக் கட்டமைப்பை பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு ஏற்கிறது.[1] வினைகள்கூடுதலான நைட்ரிக் ஆக்சைடுடன் பிரசியோடைமியம்(V) ஆக்சைடு நைத்திரைடு வினைபுரிந்து NPrO(NO) மற்றும் NPrO(NO)2 போன்ற அணைவுச் சேர்மங்களை உருவாக்கி இச்சேர்மம் ஓர் இலூயிசு அமிலமாக வெளிப்படுகிறது. மேலும் பிரசியோடைமியம்(IV) ஆக்சைடாகவும் நைட்ரசனாகவும் சிதைவடைகிறது:[1]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia