பிரசியோடைமியம்((III)) பெர்குளோரேட்டு
பிரசியோடைமியம்(III) பெர்குளோரேட்டு (Praseodymium(III) perchlorate) Pr(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த உப்பு பிரசியோடைமியத்தின் பெர்குளோரேட்டு வகை உப்பு என வகைப்படுத்தப்படுகிறது.[3] தயாரிப்புபிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடில் இருந்து பிரசியோடைமியம்((III)) பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம். பிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடை சிறிது அதிகப்படியான ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைத்து, சிறிதளவு ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து பிரசியோடைமியம்((III)) பெர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது. பண்புகள்பிரசியோடைமியம்((III)) பெர்குளோரேட்டு 1:1 மற்றும் 1:2 என்ற விகிதவியல் அளவுகளில்[4] கிரௌன் ஈதர் 18-கிரௌன்-6 உடன் இரண்டு அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. இதைத்தவிர எல்-புரோலின்,[5] குளுடாமிக் அமிலம்,[6] மாண்டலிக் அமிலம்,[6] பென்சில்லமைன்[6] ஆகியவற்றுடனும் அணைவுச் சேர்மங்களை உருவாக்க முடியும். இமிடாசோல் மற்றும் அலானின் கொண்ட அணைவுகளையும் கூட இச்சேர்மம் உருவாக்கும். [7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia