விகிதாச்சார அளவில் பிரசியோடைமியத்தையும் பாசுபரசையும் சேர்த்து 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து பிரசியோடைமியம் பெண்டாபாசுபைடு தயாரிக்கப்படுகிறது.
Pr + 5P → PrP5
பண்புகள்
பிரசியோடைமியம் பெண்டாபாசுபைடு ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் படிகமாக்குகிறது. P21/m என்ற இடக்குழுவில் a = 0.4938 நானோமீட்டர், b = 0.9595 நானோமீட்டர், c = 0.5482 நானோமீட்டர், β = 103.64°, Z = 2 என்ற செல் அளவுருக்களுடன் நியோடிமியம் பெண்டாபாசுபைடின் அதே கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[1][2]
இச்சேர்மம் 697 பாகை செல்சியசு வெப்பநிலையில் பெரிடெக்டிக்கு வினை எனப்படும் நீர்மதிண்மநிலை வினைபொருள்கள் வினைபுரிந்து ஒரு திண்மநிலை விளைபொருளாக உருவாகிறது.[3]