பிரசியோடைமியம் ஆண்டிமோணைடு

பிரசியோடைமியம் ஆண்டிமோணைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • பிரசியோடைமியம்(III) ஆண்டிமனி
  • ஆண்டிமனி-பிரசியோடைமியம்
இனங்காட்டிகள்
12066-81-8
EC number 235-071-9
InChI
  • InChI=1S/Pr.Sb.3H FGHWNOJFJVZSRX-UHFFFAOYSA-N
பண்புகள்
வாய்ப்பாட்டு எடை 262.67 கி/மோல்
அடர்த்தி 6.7 கி/செ.மீ3
உருகுநிலை 2161 அல்லது 2170 °செல்சியசு
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிரசியோடைமியம் நைட்ரைடு, PrP, பிரசியோடைமியம் ஆர்சனைடு, பிரசியோடைமியம்
பிசுமுத்தைடு, Pr2O3
ஏனைய நேர் மின்அயனிகள் சீரியம் ஆண்டிமோனைடு, நியோடிமியம் ஆண்டிமோனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு (Praseodymium antimonide) PrSb. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் ஆண்டிமனியும் சேர்ந்து இந்த இரும உப்பு உருவாகிறது.

தயாரிப்பு

பிரசியோடைமியத்துடன் ஆண்டிமனியை சேர்த்து வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு உருவாகும்.

இயற்பியல் பண்புகள்

F m3m என்ற இடக்குழுவுடன் a = 0.638 nm, Z = 4 என்ற செல் அளவுருக்களுடனும் பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு கனசதுரப் படிகங்களாக உருவாகிறது. சோடியம் குளோரைடு போன்ற கட்டமைப்பில் இதன் கட்டமைப்பும் உள்ளது.[1][2][3]

பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு 2170 ° செல்சியசு [1]அல்லது 2161 ° செல்சியசு வெப்பநிலையில்[2] உருகும். 1950 ° செல்சியசு வெப்பநிலையில், படிகங்களில் ஒரு நிலை மாற்றமும் 13 கிகா பாசுக்கல் அழுத்தத்தில், ஒரு நிலை மாற்றமும் ஏற்படுகிறது.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 3,2. Moskva: Mašinostroenie. 2001. ISBN 978-5-217-02932-7.
  2. 2.0 2.1 Franke, P.; Neuschütz, D.; Scientific Group Thermodata Europe (SGTE) (2006), Franke, P.; Neuschütz, D. (eds.), "Pr-Sb", Binary Systems. Part 4: Binary Systems from Mn-Mo to Y-Zr (in ஆங்கிலம்), vol. 19B4, Berlin/Heidelberg: Springer-Verlag, pp. 1–4, doi:10.1007/10757285_56, ISBN 978-3-540-25024-1, retrieved 2023-06-20
  3. Predel, B. (1998), Madelung, O. (ed.), "Pr-Sb (Praseodymium-Antimony)", Ni-Np – Pt-Zr (in ஆங்கிலம்), vol. I, Berlin/Heidelberg: Springer-Verlag, pp. 1–2, doi:10.1007/10542753_2498, ISBN 978-3-540-61712-9, retrieved 2023-06-20
  4. Gupta, Dinesh Chandra; Raypuria, Gajendra Singh (January 2013). "PHASE TRANSITION OF PRASEODYMIUM MONO-PNICTIDES UNDER HIGH PRESSURE" (in en). International Journal of Modern Physics: Conference Series 22: 491–496. doi:10.1142/S2010194513010568. பன்னாட்டுத் தர தொடர் எண்:2010-1945. https://www.worldscientific.com/doi/abs/10.1142/S2010194513010568. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya