மகோத்தரி மாவட்டம்

நேபாளத்தில் மகோத்தரி மாவட்டத்தின் அமைவிடம்

மகோத்தரி மாவட்டம் (Mahottari District) (நேபாளி: महोत्तरी जिल्ला,கேட்க), தெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ள மாநில எண் 2-இல் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் ஜலஸ்வர் நகரம் ஆகும்.

ஜனக்பூர் மண்டலத்தில் அமைந்த இரண்டு மாவட்டங்களில் ஒன்று மகோத்தரி மாவட்டம், மற்றொன்று தனுஷா மாவட்டம் ஆகும். மகோத்திரி மாவட்டத்தின் பரப்பளவு 1,002 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 6,27,580 ஆக உள்ளது.[1]மைதிலி மொழி (80%), நேபாளி மொழி (7.2%) மற்றும் பிற மொழிகள் (5.5%) பேசும் மக்கள் இம்மாவட்டத்தில் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜலேஸ்வர் கோயில் ஜலேஸ்வர் நகரத்தில் அமைந்துள்ளது. ஜலேஸ்வர் நகரம் இந்திய-நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

இந்தியாவின் பிகார் மாநிலத்தை தெற்கு எல்லையாக கொண்டது மகோத்தரி மாவட்டம். இதன் என்பத்தி ஐந்து விழுக்காடு பகுதிகள் தராய் சமவெளியில் அமைந்துள்ளது. மகோத்தரி மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கும் கீழிலிருந்து 1,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம்,மேல் வெப்ப மண்டலம், என இரண்டு காலநிலைகளில் காணப்படுகிறது. [2]

கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்

மகோத்தரி மாவட்ட கிராம வளர்ச்சி மற்றும் நகராட்சிகளைக் காட்டும் வரைபடம்

2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மகோத்தரி மாவட்டம் மூன்று நகராட்சி மன்றங்களையும், எழுபத்தி நான்கு கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Household and population by districts, Central Bureau of Statistics (CBS) Nepal" (PDF). Archived from the original (PDF) on 2015-02-13. Retrieved 2017-01-10.
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, retrieved Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)
  3. National Planning Commission Secretariat (November 2012). "National Population and Housing Census 2011" (PDF). Central Bureau of Statistics. Government of Nepal. pp. 27–28. Archived from the original (PDF) on 13 பிப்ரவரி 2015. Retrieved 3 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

26°38′0″N 85°48′0″E / 26.63333°N 85.80000°E / 26.63333; 85.80000

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya