மாந்தை மேற்கு பிரதேச சபை

மாந்தை மேற்கு பிரதேச சபை (Manthai West Pradeshiya Sabha) இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். மாந்தை மேற்கு,மடு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 1181.33 சதுர மைல்கள். இதன் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம் என்பனவும்; தெற்கில் நானாட்டான் பிரதேச சபை, வவுனியா மாவட்டம் என்பனவும், மேற்கில் மன்னார் பிரதேச சபை, கடல் என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். மாந்தை மேற்கு பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 12 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

2025 உள்ளூராட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 3,218 22.78% 5 0 5
  ஐக்கிய மக்கள் சக்தி 2,842 20.12% 3 1 4
  சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 2,792 19.77% 3 1 4
  தேசிய மக்கள் சக்தி 2,416 17.11% 2 2 4
இலங்கைத் தொழிற் கட்சி 1,330 9.42% 0 2 2
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 700 4.96% 0 1 1
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 492 3.48% 0 1 1
  மக்கள் கூட்டணி 334 2.36% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 14,124 100.00% 13 8 21
செல்லாத வாக்குகள் 188
பதிவான மொத்த வாக்குகள் 14,312
பதிவில் உள்ள வாக்காளர்கள் 19,134
வாக்களித்தோர் 74.80%

மேற்கோள்கள்

  1. "Local Authorities Election - 6.05.2025 Mannar District Manthai West Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 2 June 2025. Retrieved 2 June 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya