காரைநகர் பிரதேச சபை

காரைநகர் பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
கிருஷ்ணன் கோவிந்தராசன், சுயேச்சை
19 சூன் 2025 முதல்
பிரதித் தலைவர்
ஆன்டியையா விஜயராசா, தமிழ் மக்கள் கூட்டணி
19 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்11
அரசியல் குழுக்கள்
அரசு (6)

எதிர் (5)

ஆட்சிக்காலம்
4 ஆண்டுகள்
தேர்தல்கள்
கலப்பு முறைத் தேர்தல்
அண்மைய தேர்தல்
6 மே 2025

காரைநகர் பிரதேச சபை (Karainagar Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 21.74 சதுர மைல்கள். இது காரைநகர் எனப்படும் ஒரு தீவை மட்டும் முழுமையாக உள்ளடக்கியிருப்பதால் நாற்புறமும் கடலினால் சூழப்பட்டுள்ளது. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, காரைநகர் பிரதேச சபைக்கு 6 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 11 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் கீழ் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3] வட்டாரங்களின் இலக்கம், பெயர் ஆகிய விபரங்களையும், அவ்வட்டாரங்களுள் அடங்கிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் இலக்கம், பெயர்கள் முதலியவற்றையும் கீழுள்ள அட்டவணையில் காணலாம்.

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 காரை மேற்கு J40 காரைநகர் மேற்கு
J41 காரைநகர் வடமேற்கு
2 காரை வடக்கு J46 காரைநகர் வடக்கு
J48 காரைநகர் மத்தி
3 வலந்தலை J47 காரைநகர் வடகிழக்கு
4 களபூமி J42 காரைநகர் கிழக்கு
J43 காரைநகர் தென்கிழக்கு
5 காரை தென்மேற்கு J45 காரைநகர் தென்மேற்கு
6 காரை தெற்கு J44 காரைநகர் தெற்கு

தேர்தல் முடிவுகள்

2011 உள்ளூராட்சித் தேர்தல்

23 யூலை 2011 உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 1,781 40.74% 3
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 1,667 38.13% 1
  ஐக்கிய தேசியக் கட்சி 921 21.07% 1
  மக்கள் விடுதலை முன்னணி 3 0.07% 0
செல்லுபடியான வாக்குகள் 4,372 100.00% 5
செல்லாத வாக்குகள் 333
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 4,705
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 8,140
வாக்குவீதம் 57.80%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 6 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 11 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 1,623 27.84% 3 0 3
சுயேச்சைக் குழு 1,080 18.53% 3 0 3
  ஐக்கிய தேசியக் கட்சி 1,263 21.67% 0 2 2
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1,197 20.54% 0 2 2
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 359 6.16% 0 1 1
  தமிழர் விடுதலைக் கூட்டணி ** 156 2.68% 0 0 0
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 136 2.33% 0 0 0
இலங்கை பொதுசன முன்னணி 15 0.26% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 5,829 100.00% 11
செல்லாத வாக்குகள் 76
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5,905
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 8,170
வாக்குவீதம் 72.28%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 தேர்தலில் காரைநகர் பிரதேச சபையின் தலைவராக விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் (வலந்தலை, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக கணேசபிள்ளை பாலச்சந்திரன் (தங்கோடை, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளாட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5] 6 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 11 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  சுயேச்சைக் குழு 1,350 24.90% 2 0 2
  தேசிய மக்கள் சக்தி 1,044 19.26% 0 2 2
தமிழ் மக்கள் கூட்டணி 909 16.77% 0 2 2
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 833 15.37% 2 0 2
  ஐக்கிய தேசியக் கட்சி 604 11.14% 2 0 2
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 442 8.15% 0 1 1
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 166 3.06% 0 0 0
  ஐக்கிய மக்கள் சக்தி 35 0..65% 0 0 0
சோசலிச சமத்துவக் கட்சி 22 0.41% 0 0 0
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 16 0.30% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 5,421 100.00% 6 5 11
செல்லாத வாக்குகள் 73
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5,494
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 8,318
வாக்குவீதம் 66.05%

2025 தேர்தலில் காரைநகர் பிரதேச சபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு, சுயேட்சைக் குழு ஆகியவற்றுக்கிடையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி தலைவராக கிருஷ்ணன் கோவிந்தராசன் (சுயேச்சை), துணைத் தலைவராக ஆண்டிஐயா விஜயராசா (ஆலடி, தமிழ் மக்கள் கூட்டணி) ஆகியோர் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டனர்.[6]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  5. "Local Authorities Election - 6.05.2025 Jaffna District Karainagar Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 24 May 2025. Retrieved 24 May 2025.
  6. "காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு". தமிழ்வின். Archived from the original on 22 சூன் 2025. Retrieved 22 சூன் 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya