கரைதுறைப்பற்று பிரதேச சபை
கரைதுறைப்பற்று பிரதேச சபை (Karaithurai Patru Divisional Council) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கான உள்ளூராட்சி சபை ஆகும். சாலைகள், சுகாதாரம், வடிகால்கள், வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொது சேவைகளை வழங்குவதற்கு இந்தச் சபை பொறுப்பாகும். இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2] வட்டாரங்கள்26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 13 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கீழ் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3]
தேர்தல் முடிவுகள்2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 13 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 11 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]
2025 தேர்தலில் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையின் தலைவராக கனகையா தவராசா (தண்ணீரூற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக திருச்செல்வம் இரவீந்திரன் (வற்றாப்பளை, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3] 2025 உள்ளூராட்சித் தேர்தல்2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4] 13 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 தேர்தலில் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையின் தலைவராக சின்னராசா லோகேசுவரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக யோகேசுவரன் அனோஜன் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia