வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
குமாரசாமி சுரேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி
17 சூன் 2025 முதல்
துணைத் தலைவர்
தியாகராசா தயாபரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி
17 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்32
அரசியல் குழுக்கள்
அரசு (13)

எதிர் (19)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2025

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை (Vadamarachchi South West Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வடமராட்சி தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் வடக்கில் வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை பிரதேச சபை என்பனவும்; கிழக்கில் பருத்தித்துறை பிரதேச சபையும்; தெற்கில் சாவகச்சேரி பிரதேச சபையும்; மேற்கில் பருத்தித்துறை பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகரசபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு 19 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 32 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 19 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் கீழ் வடமராட்சி தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 உடுப்பிட்டி வடக்கு J353 உடுப்பிட்டி வடக்கு
2 வல்வெட்டி J355 வல்வெட்டி (பகுதி)
J356 வல்வெட்டி மத்தி
3 சமரபாகு J357 சமரபாகு
J361 கரணவாய் வடமேற்கு
4 நவிண்டில் J360 கரணவாய் வடக்கு
5 வதிரி J375 நெல்லியடி வடக்கு
J379 அல்வாய் தெற்கு
6 அல்வாய் J378 அல்வாய்
J380 அல்வாய் கிழக்கு
7 ஆத்தை J377 நெல்லியடி கிழக்கு
J381 ஆத்தை
8 நெல்லியடி நகரம் J362 கரணவாய் மத்தி
J376 நெல்லியடி
9 இமையாணன் J358 இமையாணன்
10 இமையாணன் மேற்கு J359 இமையாணன் மேற்கு
11 உடுப்பிட்டி J352 உடுப்பிட்டி
J354 உடுப்பிட்டி தெற்கு
12 கரணவாய் J349 கரணவாய் மேற்கு
13 வீரபத்திராயன் J348 கரணவாய் தெற்கு
J350 கரணவாய்
14 உச்சில் J351 கரணவாய் கிழக்கு
J365 கரவெட்டி தெற்கு
J382 கப்பூது
15 கரவெட்டி வடக்கும் மேற்கும் J363 கரவெட்டி மேற்கு
J364 கரவெட்டி வடக்கு
16 கரவெட்டி J366 மாத்தோணி
J367 கரவெட்டி மத்தி
17 துன்னாலை J372 துன்னாலை
J373 துன்னாலை மத்தி
J374 துன்னாலை மேற்கு
18 கட்டைவேலி J368 கட்டைவேலி கிழக்கு
J369 கட்டைவேலி
19 துன்னாலை தெற்கும் கிழக்கும் J370 துன்னாலை தெற்கு
J371 துன்னாலை கிழக்கு

தேர்தல் முடிவுகள்

1998 உள்ளூராட்சித் தேர்தல்

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,888 45.11% 9
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 2,940 34.11% 6
  தமிழீழ விடுதலை இயக்கம் 1,236 14.34% 2
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 554 6.43% 0
செல்லுபடியான வாக்குகள் 8,618 100.00% 17
செல்லாத வாக்குகள் 1,868
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 10,486
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 45,214
வாக்குவீதம் 23.19%

2011 உள்ளூராட்சித் தேர்தல்

22 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 12,454 81.46% 15
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ** 2,522 16.50% 3
  ஐக்கிய தேசியக் கட்சி 290 1.90% 0
சுயேச்சை 22 0.14% 0
செல்லுபடியான வாக்குகள் 15,288 100.00% 18
செல்லாத வாக்குகள் 1,386
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 16,674
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 32,539
வாக்குவீதம் 51.24%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 19 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 12 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1,990 8.86% 1 2 3
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 6,320 28.15% 8 1 9
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 5,309 23.64% 5 2 7
  இலங்கை பொதுசன முன்னணி 125 0.56% 0 0 0
  ஐக்கிய தேசியக் கட்சி 1,109 4.94% 0 2 2
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 5,250 23.38% 4 3 7
செல்லுபடியான வாக்குகள் 22,453 100.00% 19 12 31
செல்லாத வாக்குகள் 349
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 22,802
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 35,047
வாக்குவீதம் 65.06%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மூன்றாவது தடவையாக ஆட்சி அமைத்தது.[7]

2018 தேர்தலில் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தலைவராக தங்கவேலாயுதம் ஐங்கரன் (வதிரி, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக கந்தர் பொன்னையா (உச்சில் கப்புது, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளாட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[8] 19 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 32 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 6,995 37.67% 13 0 13
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 4,255 22.91% 5 2 7
  தேசிய மக்கள் சக்தி 3,329 17.93% 0 6 6
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 2,512 13.53% 1 3 4
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 1,165 6.27% 0 2 2
  ஐக்கிய மக்கள் சக்தி 170 0.92% 0 0 0
  ஐக்கிய தேசியக் கட்சி 145 0.78% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 18,571 100.00% 19 13 32
செல்லாத வாக்குகள் 354
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 18,925
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 37,364
வாக்குவீதம் 50.65%

2025 தேர்தலில் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தலைவராக குமாரசாமி சுரேந்திரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக தியாகராசா தயாபரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[9]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  5. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 21 மார்ச் 2017. 
  6. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  7. "ஊர்காவற்றுறை பிரதேச சபையின் புதிய ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நாளை மீண்டும் ஏற்பு". தினக்குரல். 19 மார்ச் 2018. Retrieved 29 April 2018.
  8. "Local Authorities Election - 6.05.2025 Jaffna District Vadamarachi South West Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 30 May 2025. Retrieved 30 May 2025.
  9. "தமிழ் அரசுக் கட்சி வசமான வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை!". அததெரண. Archived from the original on 28 சூன் 2025. Retrieved 28 சூன் 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya