துணுக்காய் பிரதேச சபை
துணுக்காய் பிரதேச சபை (Thunukkai Divisional Council) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கான உள்ளூராட்சி சபை ஆகும். சாலைகள், சுகாதாரம், வடிகால்கள், வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொது சேவைகளை வழங்குவதற்கு இந்தச் சபை பொறுப்பாகும். இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, துணுக்காய் பிரதேச சபைக்கு 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2] வரலாறுஇலங்கையின் உள்ளூராட்சிகளின் வரலாற்றில் 1987 இல் ஒரு பெரும் மறுசீரமைப்பு இடம்பெற்றது. 1981 இல் அமைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகள் இல்லாமலாக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாகப் பிரதேச சபைகள் அமைக்கப்பட்டன. 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம் 1987 ஏப்ரல் 15 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 1988 சனவரி 1 முதல் 257 பிரதேச சபைகள் செயற்பட ஆரம்பித்தன. துணுக்காய் பிரதேச சபை துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கான உள்ளூராட்சி சபையாக நிறுவப்பட்டது. 1983 இல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக இலங்கை அரசாங்கம் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நாட்டின் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சிகளையும் இடைநிறுத்தியது.[3] அதன் பின்னர் துணுக்காய் பிரதேச சபைத் தேர்தல்கள் 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.[4] வட்டாரங்கள்26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள துணுக்காய் பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. துணுக்காய் பிரதேச சபையின் கீழ் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[5]
தேர்தல் முடிவுகள்2011 உள்ளூராட்சித் தேர்தல்2011 மார்ச் 17 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[5]
2025 தேர்தலில் துணுக்காய் பிரதேச சபையின் தலைவராக அம்பலவாணர் அமிர்தலிங்கம் (பாரதிநகர், இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக தங்கவேல் சிவகுமார் (மல்லாவி, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[5] 2025 உள்ளூராட்சித் தேர்தல்2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[7] 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 தேர்தலில் துணுக்காய் பிரதேச சபையின் தலைவராக கனகரத்தினம் செந்தூரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக விஜயரத்தினம் விஜயகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia