பருத்தித்துறை பிரதேச சபை

பருத்தித்துறை பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
உதயகுமார் யுகதீஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி
17 சூன் 2025 முதல்
துணைத் தலைவர்
கனகரத்தினம் சிறிகாந்த், இலங்கைத் தமிழரசுக் கட்சி
17 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்20
அரசியல் குழுக்கள்
அரசு (9)

எதிர் (11)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2025

பருத்தித்துறை பிரதேச சபை (Point Pedro Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை ஆகியவற்றுக்குள் அடங்கும் பகுதிகளைத் தவிர்த்து, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 185.00 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் பருத்தித்துறை நகரசபை, கடல் என்பனவும்; தெற்கில் முல்லைத்தீவு மாவட்டம், யாழ்ப்பாண நீரேரி ஆகியனவும்; மேற்கில் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டம் என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் கீழ் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3]

  1. கெருடாவில்
  2. பொலிகண்டி
  3. அல்வாய் வடமேல்
  4. வியாபாரிமூலை
  5. புலோலி மேற்கு
  6. புலோலி கிழக்கு
  7. வல்லிபுரம் கோவில்
  8. குடத்தனை
  9. நாகர்கோவில்
  10. மருதங்கேணி
  11. உடுத்துறை
  12. முள்ளியான்

தேர்தல் முடிவுகள்

1998 உள்ளாட்சித் தேர்தல்

29 சனவரி 1998 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]

கூட்டணிகளும் கட்சிகளும் வக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 2,208 43.51% 5
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 1,459 28.75% 2
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 859 16.93% 1
  தமிழீழ விடுதலை இயக்கம் 549 10.82% 1
செல்லுபடியான வாக்குகள் 5,075 100.00% 9
செல்லாத வாக்குகள் 1,177
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 6,252
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 29,929
வாக்குவீதம் 20.89%

2011 உள்ளாட்சித் தேர்தல்

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 8,938 73.56% 7
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 3,022 24.87% 2
  ஐக்கிய தேசியக் கட்சி 133 1.09% 0
சுயேச்சை 57 0.47% 0
செல்லுபடியான வாக்குகள் 12,150 100.00% 9
செல்லாத வாக்குகள் 1,031
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 13,181
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 25,375
வாக்குவீதம் 51.94%

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு* 6,532 33.32% 8 0 8
  ஐக்கிய தேசியக் கட்சி 795 4.06% 0 1 1
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3,588 18.30% 1 2 3
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 3,897 19.88% 2 2 4
  தமிழர் விடுதலைக் கூட்டணி ** 1,830 9.34% 0 2 2
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 2.049 10.45% 1 1 2
இலங்கை பொதுசன முன்னணி 912 4.65% 0 1 1
செல்லுபடியான வாக்குகள் 19,603 100.00% 12 9 21
செல்லாத வாக்குகள் 305
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 19,908
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 29,394
வாக்குவீதம் 67.73%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபையின் தலைவராக அரியரத்தினம் சாள்ஸ் அரியகுமார் (உடுத்துறை, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக குமாரசிங்கம் தினேசு (பொலிகண்டி, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளூராட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[7] 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 7,490 41.99% 9 0 9
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3,684 20.65% 1 3 4
  தேசிய மக்கள் சக்தி 3,892 21.82% 1 3 4
  சுயேச்சைக் குழு 1,363 7.64% 1 1 2
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 924 5.18% 0 1 1
  ஐக்கிய தேசியக் கட்சி 229 1.28% 0 0 0
  ஐக்கிய மக்கள் சக்தி 257 1.44% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 17,839 100.00% 12 8 20
செல்லாத வாக்குகள் 309
பதிவான மொத்த வாக்குகள் 18,148
பதிவில் உள்ள வாக்காளர்கள் 33,089
வாக்களித்தோர் 54.85%

2025 தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபையின் தலைவராக உதயகுமார் யுகதீஸ் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக கனகரத்தினம் சிறிகாந்த் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[8][9]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  5. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 24 மார்ச் 2017. 
  6. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  7. "Local Authorities Election - 6.05.2025 Jaffna District Point pedro Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 24 May 2025. Retrieved 24 May 2025.
  8. "பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளராக உதயகுமார் யுகதீஸ் ஏகமனதாக தெரிவு". தமிழ்வின். Archived from the original on 28 சூன் 2025. Retrieved 28 சூன் 2025.
  9. "போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட புதிய தவிசாளர்!". அததெரண. Retrieved 28 சூன் 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya