மன்னார் பிரதேச சபை
மன்னார் பிரதேச சபை (Mannar Divisional Council) இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். மன்னார் நகரசபைப் பகுதி தவிர்ந்த மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 189.35 சதுர மைல்கள். இதற்குள் தலைமன்னார்த் தீவின் பெரும் பகுதியும், தலைநிலத்தில் உள்ள உயிலங்குளம் பகுதியும் அடங்கியுள்ளன. தலைமன்னார்த் தீவின் தெற்கு பகுதியில் மன்னார் நகரசபையுடன் பொது எல்லையைக் கொண்டுள்ள ஒரு சிறு பகுதி தவிர ஏனைய பகுதிகள் கடலால் சூழப்பட்டுள்ளன. தலை நிலத்தில், இதன் வடக்கில் நீரேரியும்; கிழக்கில் மாந்தை மேற்கு பிரதேச சபையும்; தெற்கிலும், மேற்கிலும் நானாட்டான் பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, மன்னார் பிரதேச சபைக்கு 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2] வட்டாரங்கள்26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள மன்னார் பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 11 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் கீழ் மன்னார் நகரசபைப் பகுதி தவிர்ந்த மன்னார் பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3]
தேர்தல் முடிவுகள்2011 உள்ளூராட்சித் தேர்தல்23 யூலை 2011 உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[4]
2018 உள்ளூராட்சித் தேர்தல்2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]
மன்னார் பிரதேச சபையின் தலைவராக சாகுல்கமீது முகம்மது முசாகிர் (புதுக்குடியிருப்பு, ஐக்கிய தேசியக் கட்சி), துணைத் தலைவராக மொகமது இசுமாயில் மொகமது இசதீன் (எருக்கலம்பிட்டி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3] 2025 உள்ளூராட்சித் தேர்தல்2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5] 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:
2025 தேர்தலில் மன்னார் பிரதேச சபையின் தலைவராக ஏ. ஜே. எம். சப்ரான் (அகில இலங்கை மக்கள் காங்கிரசு), துணைத் தலைவராக ரொயிட்டன் சாந்தினி குரூசு (சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia