பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
சுரேன் சுப்பிரமணியம், இலங்கைத் தமிழரசுக் கட்சி
15 மே 2025 முதல்
பிரதித் தலைவர்
செல்வராசா சிவகுரு, இலங்கைத் தமிழரசுக் கட்சி
15 மே 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்13
அரசியல் குழுக்கள்
அரசு (6)

எதிர் (7)

ஆட்சிக்காலம்
4 ஆண்டுகள்
தேர்தல்கள்
கலப்பு முறைத் தேர்தல்
அண்மைய தேர்தல்
6 மே 2025

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை (Pachchilaipalli Divisional Council) இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 167.75 சதுர மைல்கள். இதன் வடக்கிலும், கிழக்கிலும் யாழ்ப்பாண மாவட்டமும்; தெற்கில் கரைச்சி பிரதேச சபையும்; மேற்கில் யாழ்ப்பாண நீரேரியும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3] இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 முகமாலை KN91 அரசங்கேணி
KN92 இத்தாவில்
KN93 முகமாலை
2 கிளாலி KN89 அல்லைப்பளை
KN94 வேம்பொடுகேணி
KN95 கிளாலி
3 பளை KN87 பளை நகரம்
KN88 புலோப்பளை மேற்கு
KN90 கச்சார்வெளி
4 தம்பகாமம் KN86 தம்பகாமம்
5 முல்லையடி KN84 புலோப்பளை
KN85 முல்லையடி
6 சோரன்பற்று KN82 சோரன்பற்று
KN83 தர்மகேணி
7 முகாவில் KN80 முகாவில்
KN81 மாசார்
8 முள்ளிப்பற்று KN78 முள்ளிப்பற்று
KN79 இயக்கச்சி

தேர்தல் முடிவுகள்

1998 உள்ளூராட்சித் தேர்தல்

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 731 46.15% 5
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 377 23.80% 2
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 362 22.85% 2
  தமிழீழ விடுதலை இயக்கம் 114 7.20% 0
செல்லுபடியான வாக்குகள் 1,584 100.00% 9
செல்லாத வாக்குகள் 385
பதிவான மொத்த வாக்குகள் 1,969
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 7,463
வாக்குவீதம் 26.38%

2011 உள்ளூராட்சித் தேர்தல்

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[6]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 1,650 55.89% 6
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 1,184 40.11% 3
  ஐக்கிய தேசியக் கட்சி 114 3.86% 0
  மக்கள் விடுதலை முன்னணி 4 0.14% 0
செல்லுபடியான வாக்குகள் 2,952 100.00% 9
செல்லாத வாக்குகள் 339
பதிவான மொத்த வாக்குகள் 3,291
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 7,116
வாக்குவீதம் 46.25%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 2,953 43.74% 6 0 6
  சுயேச்சைக் குழு 2,070 30.66% 2 2 4
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு 651 9.64% 0 1 1
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 465 6.89% 0 1 1
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 330 4.89% 0 1 1
  ஐக்கிய தேசியக் கட்சி 179 2.65% 0 0 0
  தமிழர் விடுதலைக் கூட்டணி 59 0.87% 0 0 0
  லங்கா சமசமாஜக் கட்சி 44 0.65% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 6,751 100.00% 8 5 13
செல்லாத வாக்குகள் 109
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 6,860
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 10,220
வாக்குவீதம் 67.12%

கரைச்சி பிரதேச சபையின் தலைவராக சுப்பிரமணியம் சுரேன் (தம்பகாமம், இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக முத்துக்குமார் கஜன் (பளை, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளூராட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[7] 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 3,040 44.35% 6 0 6
  சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1,511 22.04% 1 2 3
  தேசிய மக்கள் சக்தி 1,349 19.68% 1 2 3
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 506 7.41% 0 1 1
  ஐக்கிய மக்கள் சக்தி 208 3.03% 0 0 0
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 123 1.79% 0 0 0
  சுயேச்சைக் குழு 100 1.46% 0 0 0
  ஐக்கிய தேசியக் கட்சி 16 0.23% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 6,855 100.00% 8 5 13
செல்லாத வாக்குகள் 120
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 6,975
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 10,998
வாக்குவீதம் 63.42%

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவராக சுரேன் சுப்பிரமணியம் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக செல்வராசா சிவகுரு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேற்கோள்கள்

  1. "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  5. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 26 மார்ச் 2017. 
  6. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  7. "Local Authorities Election - 6.05.2025 Kilinochchi District Pachilaipalli Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 31 May 2025. Retrieved 31 May 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya