மாந்தை கிழக்கு பிரதேச சபை

மாந்தை கிழக்கு பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
இராசையா நளினி, இலங்கைத் தமிழரசுக் கட்சி
26 சூன் 2025 முதல்
துணைத் தலைவர்
சத்தியமூர்த்தி சத்தியவரதன், சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
26 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்13
அரசியல் குழுக்கள்
அரசு (4)

எதிர் (9)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2025

மாந்தை கிழக்கு பிரதேச சபை (Manthai East Divisional Council, MEDC) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கான உள்ளூராட்சி சபை ஆகும். சாலைகள், சுகாதாரம், வடிகால்கள், வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொது சேவைகளை வழங்குவதற்கு இந்தச் சபை பொறுப்பாகும். இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3]

  1. விநாயகபுரம்
  2. கரும்புள்ளியான்
  3. பாண்டியன்குளம்
  4. பாலிநகர்
  5. ஒட்டறுத்தகுளம்
  6. பனங்காமம்
  7. செல்வபுரம்
  8. நட்டாங்கண்டல்

தேர்தல் முடிவுகள்

2011 உள்ளூராட்சித் தேர்தல்

2011 மார்ச் 17 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இருக்கைகள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எஃப் (சுரேசு), இதக, புளொட், டெலோ, தவிகூ, ததேவிகூ) 1,223 55.54% 6
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஈபிடிபி, இசுக மற்றும் பல) 920 41.78% 3
குடிமக்கள் முன்னணி 56 2.54% 0
  ஐக்கிய தேசியக் கட்சி 3 0.14% 0
செல்லுபடியான வாக்குகள் 2,202 100.00% 9
செல்லாத வாக்குகள் 146
மொத்த வாக்குகள் 2,348
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 5,578
வாக்குவீதம் 42.09%

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு* 1,836 42.83% 4 2 6
  ஐக்கிய தேசியக் கட்சி 1,505 35.11% 4 0 4
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 523 12.20% 0 2 2
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 192 4.48% 0 1 1
  தமிழர் விடுதலைக் கூட்டணி 122 2.85% 0 0 0
  இலங்கை பொதுசன முன்னணி 46 1.07% 0 0 0
  மக்கள் விடுதலை முன்னணி 34 0.79% 0 0 0
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 29 0.68% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 4,287 100.00% 8 5 13
செல்லாத வாக்குகள் 49
செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் 4,336
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 5,184
வாக்குவீதம் 83.64%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2025 தேர்தலில் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தலைவராக மகாலிங்கம் தயானந்தன் (நந்தன்கண்டல், இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக ராஜ்குமார் சிந்துஜன் (சிறீ லங்கா சுதந்திரக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளூராட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்: 13 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:[6]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 1,364 29.52% 4 0 4
  ஐக்கிய மக்கள் சக்தி 990 21.43% 2 1 3
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 808 17.49% 1 1 2
  தேசிய மக்கள் சக்தி 607 13.14% 1 1 2
  சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 500 10.82% 0 2 2
இலங்கைத் தொழிற் கட்சி 136 2.94% 0 0 0
  சுயேச்சைக் குழு 1 81 1.75% 0 0 0
  சுயேச்சைக் குழு 2 134 2.90% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 4,620 100.00% 8 5 13
செல்லாத வாக்குகள் 59
செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் 4,679
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 6,354
வாக்குவீதம் 73.64%

2025 தேர்தலில் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தலைவராக நளினி இராசையா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக சத்தியமூர்த்தி சத்தியவரதன் (சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[7]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Local Authorities Election - 17.03.2011 Mullaitivu District Manthai East Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.
  5. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  6. "Local Authorities Election - 6.05.2025 Mullaitivu District Manthai East Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 4 June 2025. Retrieved 4 June 2025.
  7. "மாந்தை கிழக்கு பிரதேச சபை தமிழரசு கட்சி வசம்". அததெரண. Archived from the original on 1 சூலை 2025. Retrieved 1 சூலை 2025.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya