ஹும்லா மாவட்டம்
![]() ஹும்லா மாவட்டம் (Humla District) (நேபாளி: हुम्ला जिल्लाⓘ, மத்திய மேற்கு நேபாளத்தின் மாநில எண் 6–இல் அமைந்த, நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சிமிகோட் நகரம் ஆகும். இம்மாவட்டம் 7 சிமிகோட், நம்கா, கர்புநாத், சர்கேகத், சான்கேலி, அதன்சுலி, தஜாகோட் எனும் 7 கிராமிய நகராட்சிக்களை கொண்டது. இம்மாவட்டம் நேபாள-திபெத் எல்லைப்புறத்தில் உள்ளது. இதனருகே திபெத் பகுதியில் கயிலை மலை உள்ளது. 5,655 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹும்லா மாவட்டத்தின் மக்கள் தொகை 50,858 ஆகும்.[1] ஹும்லா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் திபெத்திய பௌத்தர்களும், தெற்குப் பகுதியில் இந்துக்களும் வாழ்கின்றனர். புவியியல் மற்றும் தட்ப வெப்பம்![]() இமயமலையில் அமைந்த இம்மாவட்டத்தின் வடக்கில் அமைந்த திபெத் தன்னாட்சிப் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத் தலைமையிடமான சிமிகோட்டிலிருந்து, கயிலை மலைக்கு நடைபாதையாக செல்வதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும்.
மருத்துவ நலம்
இம்மாவட்ட மக்கள் அலோபதி மருத்து முறையை விட உள்ளூர் மருத்துவ சிகிச்சைகளையே பெரிதும் நாடுகின்றனர். சுற்றுலாஇமயமலையில் அமைந்த இம்மாவட்டம், மலையேற்ற பயிற்சிக்கு உகந்ததாக உள்ளது. சிமிகோட் வானூர்தி நிலையம், வெளி நாட்டு மலை ஏற்ற வீரர்களுக்கு உதவியாக உள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia