இருகந்தகம் ஈரயோடைடு
இருகந்தகம் ஈரயோடைடு (Disulfur diiodide) என்பது S2I2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிலைப்புத்தன்மையற்ற இச்சேர்மம் செம்பழுப்பு நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. −30 °செல்சியசு வெப்பநிலையில் இருகந்தகம் ஈரயோடைடு சிதைவடைந்து தனிமநிலை கந்தகம் மற்றும் அயோடைடாக மாறுகிறது.[1] தயாரிப்புகந்தகம் மற்றும் அயோடின் வினை1813 ஆம் ஆண்டில் பெர்னார்டு கோர்டோயிசு தான் புதிதாகக் கண்டுபிடித்த தனிமமான அயோடினின் பண்புகளை ஆராயும் போது கந்தக அயோடைடை உற்பத்தி செய்வதற்கான முதல் முயற்சியும் உரிமைகோரலும் செய்யப்பட்டது. கந்தகம் மற்றும் அயோடின் ஆகியவை இரண்டையும் வினையில் ஈடுபடுத்தி ஒரு சேர்மம் தயாரித்ததாக இவர் கூறினார். இருப்பினும், 1827 மற்றும் 1896 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்த தயாரிப்பு கே-லுசாக்கால் சந்தேகிக்கப்பட்டது. இவ்விரு தனிமங்களை இணைப்பதன் மூலம் கந்தக அயோடைடை உருவாக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முயற்சிகளும் கலவையின் இருப்பை நிருபிக்கத் தவறின அல்லது தோல்வியுற்றன. பின்னர், வெப்பப் பகுப்பாய்வு உருவாக்கப்பட்ட போது, தனிமங்கள் இணைப்பு உருவாக்கும் கந்தக அயோடைடு ஒரு சேர்மம் அல்ல இது ஒரு கலவை மட்டுமே என்று காட்டப்பட்டது.[2] இரட்டை இடப்பெயர்ச்சி மூலம் உற்பத்திதனிமங்களின் நேரடி சேர்க்கை மூலம் கந்தக அயோடைடை உருவாக்கும் முயற்சிகள் சேர்மத்தின் குறைந்த வெப்ப இயக்கவியல் நிலைத்தன்மையைக் கடக்கத் தவறியபோது, 1833 மற்றும் 1886 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இரட்டை இடப்பெயர்ச்சி மூலம் உற்பத்தி செய்ய முயற்சி செய்யப்பட்டது. இருகந்தக இருகுளோரைடு மற்றும் ஐதரயோடிக்கு அமிலத்தின் வினைகள் முயற்சி செய்யப்பட்டன.[2]
மற்றொரு முயற்சியாக ஐதரசன் சல்பைடும் அயோடின் முக்குளோரைடும் வினையில் ஈடுபடுத்தப்பட்டன.
ஐதரயோடிக்கு அமிலத்துடன் கந்தகம் சேர்ந்து வினைபுரிந்து இருகந்தகம் ஈரயோடைடு உருவாகும்.
இருகந்தகம் இருகுளோரைடுடன் பொட்டாசியம் அயோடைடு சேர்ந்து வினை புரிந்தாலும் இருகந்தகம் ஈரயோடைடு உருவாகும்.
மேலும், அனைத்து தயாரிப்பு முறைகளும் கந்தக அயோடைடை உற்பத்தி செய்யத் தவறியதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், 1835 ஆம் ஆண்டில் முயற்சித்த S2Cl2 மற்றும் HI இடையேயான வினையானது இருகந்தகம் ஈரயோடைடை உருவாக்கியதாக பின்னர் நிரூபிக்கப்பட்டது.[2] 1940 ஆம் ஆண்டில், நான்காவதாக கூறப்பட்டுள்ள வினையுடன் மற்றொரு தயாரிப்பு முயற்சி மேற்கொள்ளபட்டது. பல்வேறு கந்தக அயோடைடுகள் கண்டறிந்ததாகக் கூறப்பட்டது, அதாவது இருகந்தகம் ஈரயோடைடு, கந்தக ஈரயோடைடு ஆகியன உருவானதாக கூறப்பட்டது. இவ்வினையை உற்றுநோக்குகையில் மிகவும் நீர்த்த இருகந்தக இருகுளோரைடு கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் பொட்டாசியம் அயோடைடுடன் வினைபுரிவது அறியப்பட்டது:[2][3]
விளைபொருள் மஞ்சள் நிறத்தில் இருந்து செம்-பழுப்பு நிறமாகவும் இறுதியாக ஊதா நிறமாக மாறுவதையும் அவர்கள் கவனித்தனர். இம்மாற்றம் கந்தக அயோடைடுகள் உருவாவதற்கான ஆதாரமாக கருதப்பட்டது. சேர்மம் அறை வெப்பநிலையில் மெதுவாக சிதைவது கண்டறியப்பட்டது, மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் போது சிதைவு விகிதமும் அதிகரித்தது.[3] தனிமைப்படுத்தல்இருகந்தகம் ஈரயோடைடு முதலில் இருகந்தகம் இருகுளோரைடு மற்றும் பொட்டாசியம் அயோடைடு, பெண்டேனில் உள்ள சோடியம் அயோடைடு அல்லது ஐதரசன் அயோடைடு ஆகியவற்றின் வினையால் −90 °செல்சியசு வெப்பநிலையில் தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அகச்சிவப்பு நிறமாலை மூலம் சரிபார்க்கப்பட்டது.[4][5] பண்புகள்இருகந்தகம் ஈரயோடைடு ஒளி-உணர்திறன் கொண்டது மற்றும் கார்பன் டெட்ராகுளோரைடு போன்ற பல்வேறு ஆலோ ஆல்க்கேன்களில் கரையும்.[3] பிற கந்தக அயோடைடுகள்கந்தகம் ஈரயோடைடு (SI2) இறுதியாக ஒரு ஆர்கான் அச்சு வார்ப்புருவில் கந்தகம் இருகுளோரைடு மற்றும் அயோடின் வினை மூலம் உருவானதாகப் பதிவாகியுள்ளது; இருப்பினும், இது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.[6] ஆண்டிமனி பெண்டாபுளோரைடு அல்லது ஆர்சனிக்கு பெண்டாபுளோரைடில் கந்தகமும் அயோடினும் வினைபுரிந்து S7I+ அயனி உருவாகிறது. பிற கந்தகம் அயோடின் சேர்மங்களைப் போல அல்லாமல் இது அறைவெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது.[7] இருகந்தகம் ஈரயோடைடின் அனுபவ வாய்ப்பாடு SI ஆகும். எனவே இது சில சமயங்களில் கந்தகம் மோனோ அயோடைடு என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் S2I2 ஒரு சகப்பிணைப்பு மூலக்கூறு ஆகும். இது 1:1 விகிதவியல் அளவு கொண்ட SI மூலக்கூறு அல்லது அயனி உப்பு போன்றது அல்ல. உண்மையான கந்தக மோனோ அயோடைடு மூலக்கூறு ஓர் இயங்குறுப்பு ஆகும்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia