சாணக்கியன் ராகுல் ராசபுத்திரன் இராசமாணிக்கம் (Shanakiyan Ragul Rajaputhiran Rasamanickam , பிறப்பு: 20 செப்டம்பர் 1990) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[ 1]
வாழ்க்கைக் குறிப்பு
சாணக்கியன் 1990 செப்டம்பர் 20 இல் பிறந்தார்.[ 1] இவர் முன்னாள் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சி. மூ. இராசமாணிக்கத்தின் பேரன் ஆவார்.[ 2] [ 3] இவர் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[ 3]
அரசியல் வாழ்க்கை
இவர் முன்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளராக இருந்தவர்.[ 4] [ 5] இவர் ராசபக்ச ஆட்சியின் ஆதரவாளராகவும், துணை இராணுவக் குழுத் தலைவர் பிள்ளையானின் ஆதரவாளராகவும் செயல்பட்டவர்.[ 4] இவர் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[ 2]
சாணக்கியன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[ 6] [ 7] இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[ 8] [ 9] [ 10] 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 65,458 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 "Directory of Members: Shanakiyan Rajaputhiran Rasamanickam" . Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம் . Retrieved 7 September 2020 .
↑ 2.0 2.1 D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls" . Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440 . பார்த்த நாள்: 7 September 2020 .
↑ 3.0 3.1 "Social media praise for New TNA MP’s trilingual speaking ability displayed in his maiden speech in Parliament" . NewsWire (Nugegoda, Sri Lanka). 4 September 2020. http://www.newswire.lk/2020/09/04/social-media-praise-for-new-tna-mps-trilingual-speaking-ability-displayed-in-his-maiden-speech-in-parliament/ . பார்த்த நாள்: 7 September 2020 .
↑ 4.0 4.1 "Sri Lanka’s big Facebook spenders" . Tamil Guardian . 4 August 2020. https://www.tamilguardian.com/content/sri-lanka%E2%80%99s-big-facebook-spenders . பார்த்த நாள்: 7 September 2020 .
↑ "Rajaputhran for Paddiruppu, Arundika for Wennappuwa" . Sri Lanka Mirror (Nugegoda, Sri Lanka). 21 February 2013 இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211031181743/http://archive.srilankamirror.com/news/5445-rajaputram-for-padirpuwa-arundika-for-wennappuwa . பார்த்த நாள்: 7 September 2020 .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 1923/3. Colombo, Sri Lanka. 13 July 2015. p. 270A. Retrieved 11 August 2015 .
↑ "Ranil tops with over 500,000 votes in Colombo" . The Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo . பார்த்த நாள்: 7 September 2020 .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 6A. Retrieved 9 August 2020 .
↑ 9.0 9.1 "General Election 2020: Preferential votes of Batticaloa District" . Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100203/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-batticaloa-district . பார்த்த நாள்: 7 September 2020 .
↑ Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament" . Sunday Observer (Colombo, Sri Lanka). http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament . பார்த்த நாள்: 7 September 2020 .
↑ "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election" . EconomyNext . 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241121054933/https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/ .