செண்ட்ரல் ஸ்டுடியோஸ் (Central Studios) என்பது தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழித் திரைப்படத் தயாரிப்புதற்காக உருவாக்கப்பட்ட திரைப்பட படப்பிடிப்பு வளாகம் ஆகும். இதை 1935 இல் பி. ரங்கசாமி நாயுடு (ஏ.கே.ஏ. பி.ஆர். நாயுடு) மற்றும் தமிழகத் திரைப்படத்துறையைச் சேர்ந்த சாமிக்கண்ணு வின்சென்ட் போன்ற பிற முக்கிய தொழிலதிபர்களால் தொடங்கப்பட்டது. இந்த படப்பிடிப்பு வளாகமானது கோமுத்தூர் இந்த படப்பிடிப்பு வளாகம் கோயம்புத்தூரின்சிங்காநல்லூரில் செயல்பட்டது. இது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பின் முக்கிய மையமாக இருந்தது. பல ஆரம்பகால தமிழ்த் திரைப்பட உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர்கள், திரை எழுத்தாளர்கள் மற்றும் பலர் தங்கள் தொழில் வாழ்க்கையை இங்கிருந்து துவக்கியதால் குறிப்பிடத்தக்கது. சிவகவி, வேலைக்காரி, ஹரிதாஸ் போன்ற படங்களினால் இந்த படப்பிடிப்பு வளாகம் சிறப்பாக நினைவில் நிற்கிறது .
வரலாறு
கோவையில் திரையுலகம்
சாமிகண்ணு வின்சென்ட்
தென்னிந்திய இரயில்வே ஊழியரான சாமிகண்ணு வின்சென்ட் ஒரு சுற்றுலா கண்காட்சியில் டு பான்ட் என்ற பிரெஞ்சுக்காரரிடம் இருந்து சில மௌனப் படங்களையும் ஒரு திரைப்பட ஒளிப்படக்காட்டியையும் (ப்ரொஜெக்டர) 1905 ஆம் ஆண்டில் வாங்கினார். அதன் பிறகே கோயம்புத்தூரில் திரைப்பத் துறை என்பது ஒரு முக்கிய தொழிலாக மாறியது. பின்னர் சாமிகண்ணு வின்சென்ட் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, தற்காலிக கூடாரங்களை அமைத்து அதில் திரைப்படங்களை திரையிட்டு ஒரு வணிகமாக அதை உருவாக்கினார். அவர் தனது நடமாடும் திரைப்பட அலகு மூலம் நாடு முழுவதும் பயணம் செய்ததால் அவரது கூடார திரைப்படம் பிரபலமடைந்தது. 1917 இல், சாமிகண்ணு வின்சென்ட் தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் சினிமாவை நகர மண்டபத்தில் கட்டினார்; அது இப்போது ஆட் டெலைட் தியேட்டர் என்று அழைக்கப்படுகிறது. சாமிகண்ணு வின்சென்ட் தனது திரையரங்குகளுக்கு சொந்தமாக மின்சாரத்தை தயாரித்துக் கொண்டதால், ஊமைப் படங்களைத் திரையிடுவதற்காக நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ச்சியாக திரையரங்குகளைக் கட்டினார். மேலும் இவர் பிரெஞ்சு Pathé Frères திரைப்பட ஒளிப்படக்காட்டிகளின் விநியோகத்தராகவும் ஆனார். 1930 களின் முற்பகுதியில் அவர் ஒலி திரைப்படத்தை உருவாக்க வெரைட்டி ஹால் டாக்கீஸ் என்ற பதாகையின் கீழ் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். ஒரு திரைப்பட படப்பிடிப்பு வளாகம் வேண்டும் என்று உணர்ந்த இவர், மற்ற தொழில்துறையினர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து, கோயம்புத்தூரில் ஒரு முழுமையான படப்பிடிப்பு வளாகத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
1920 களின் பிற்பகுதியில், சபாபதி என்பவரின் வேரொரு நிறுவனம் இத்தாலிய திரைப்பட ஒளிப்படக்காட்டி நிறுவனத்தின் விநியோகத்தில் ஈடுபட்டது. இறுதியில் கோயம்புத்தூரில் இவர்களின் சொந்த நிறுவனத் தயாரிப்பில் திரைப்பட ஒளிப்படக்காட்டிகளை தயாரிக்கும் நிலைக்கு வந்தனர். முப்பதுகளின் முற்பகுதியில், கோயம்புத்தூரில் ஏற்கனவே பிரீமியர் சினிடோன் ஸ்டுடியோ [3] (பின்னர் பட்சிராஜா ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றப்பட்டது) என்ற படப்பிடிப்பு வளாகம் இருந்தது. 1935 ஆம் ஆண்டில், இலண்டனில் படித்த பட்டதாரியான டி. ஆர். சுந்தரம், சேலத்தில் ஒரு முழுமையான திரைப்பட படப்பிடிப்பு வளாகமான, மாடர்ன் தியேட்டர்சை கட்டினார். இதனால் மேலும் இப்பகுதி திரைப்படத் தொழிலுக்கான மையமாக மாறியது.
படப்பிடிப்பு வளாகம் துவக்கம்
சென்ட்ரல் ஸ்டுடியோ பிரபல தொழிலதிபர்களான பி. அரங்கசாமி நாயுடு, ஆர். கே. இராமகிருஷ்ணன் செட்டியார் (இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியாரின் சகோதரர்), சாமிக்கண்ணு வின்சென்ட் மற்றும் மற்றொரு புதிய திரைப்பட இயக்குனரான எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு (இவர் உழைக்கும் பங்குதாரராக சேர்ந்தார்) ஆகியோரால் நிறுவப்பட்டது. படப்பிடிப்பு வளாகத்தின் செயல்பாடு 1936 இல் தொடங்கியது. இவர்களின் முதல் வெளியீடு 1937 இல் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கிய துக்கரம் ஆகும். 1940 களின் முற்பகுதியில் படப்பிடிப்பு வளாகம் தமிழ்த் திரைப்படத் துறையின் மையமாக மாறியது.
கோயம்புத்தூர் மாநகரில் திருச்சி சாலைக்கு அருகில் சிங்காநல்லூரில் படப்பிடிப்பு வளாகம் இருந்தது. படப்பிடிப்பு வளாகத்தில் ஒரு திரைப்படப் படப்பிடிப்புத் தளத்துக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் ஒலி மற்றும் திரைப்பட படத்தொகுப்பகம் மற்றும் தொழில்நுட்பப் பட்டறைகளும் இருந்தன. 30களில் ஒலிப் பொறியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் ஜேர்மனியர்களாகவும் பெரும்பாலான ஒப்பனைக் குழுவினர் பம்பையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.[4] படப்பிடிப்பு வளாகத்தில் எஸ். எம். சுப்பையா நாயுடு தலைமையில் ஒரு இசைத் துறையும் இருந்தது. படப்பிடிப்பு வளாகமானது பி.என்.சி. மிட்செல் ஒளிப்படமியை கொண்ட பெருமையுடன் இருந்தது. இது 1930களில் ரூ. 500,000 விலை கொண்டது. மேலும் 10 கி.வா, 5 கி.வா மற்றும் 2 கி.வா விளக்குகள் படப்பிடிப்பு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்தது. பெரும்பாலான கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மாத ஊதியத்திற்கு பணிபுரிந்தனர்.
படப்பிடிப்பு வளாக அமைப்பு
எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்து 1936 ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளி விழா வெற்றித் திரைப்படமான சிவகவி உள்ளுரிலேயே தயாரிக்கப்பட்டது. அது பல வகையில் சமூக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் ஆகும். சென்ட்ரல் ஸ்டுடியோ சில திரைப்படங்களை வெளியிட்டது, ஆனால் படப்பிடிப்பு வகாகமானது பல தயாரிப்பு பதாகைகைள் கொண்டிருந்தது. அவற்றில் மிகவும் பிரபலமானவை ஜுபிடர் பிக்சர்ஸ் மற்றும் பட்சிராஜா பிலிம்ஸ் ஆகியவை ஆகும். படப்பிடிப்பு வளாகத்துக்குள் இயங்கிய பிற தயாரிப்பு நிறுவனங்கள் நாராயணன் அண்ட் கம்பெனி, மனோரமா பிக்சர்ஸ், வேணு பிக்சர்ஸ் போன்றவை ஆகும். அப்போதைய பிரபல நகைச்சுவை நடிகர்கள் மூவரான என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. மதுரம் ஆகியோர் தங்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான அசோகா பிலிம்சை இதன் வளாகத்திற்குள் கொண்டிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் நகைச்சுவைக் காட்சிகளை சொந்தமாக உருவாக்கி, பிற திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு விற்றனர்.
இங்கு இருந்து இயங்கிய பிரபல இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு, எல்லிஸ் ஆர். டங்கன், ஏ. எஸ். ஏ. சாமி, ஏ. பி. நாகராசன் மற்றும் சென்ட்ரல் ஸ்டுடியோவில் தங்கள் முதல் திரைப்படத்தை இயக்கிய பராசக்தி புகழ் கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய பிரபல இரட்டையர்கள் போன்றோர் ஆவர். இந்தியாவின் முன்னோடி ஒளிப்பதிவாளர் ஆதி மெர்வான் இரானி [10]சிவகவி மற்றும் ஹரிதாஸ் ஆகிய படங்களுக்காக இங்கு பணியாற்றினார். இராமநாதபுரத்தில் வசித்த தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சாண்டோ சின்னப்பா தேவர், இந்தியாவின் வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறுவதற்கு முன்பு இங்கு சண்டைக் கலை நடிகராகப் பணியாற்றினார்.
இறுதி ஆண்டுகள்
1945 ஆம் ஆண்டில் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு சென்ட்ரல் ஸ்டுடியோவை விட்டு வெளியேறி பட்சிராஜா ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தனது சொந்த படப்பிடிப்பு வளாகத்தைத் தொடங்கினார். பி. ரங்கசாமி நாயுடு குடும்பம் இதன் பெரும்பாலான பங்குகளை வாங்கியது. 1940களின் பிற்பகுதியில் இப்படப்பிடிப்பு வளாகத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது. பி. ஆர். நாயுடுவின் மறைவுக்குப் பிறகு, ஸ்டுடியோ நிர்வாகம் லட்சுமி ஆலைகள் குடும்பத்தின் வசம் வந்தது. சென்னை முக்கிய திரைப்பட மையமாக உருவெடுத்ததால், திரைப்படத் துறையினர் சென்னையை நோக்கி நகரத் துவங்கியதால் 1959 இல் படப்பிடிப்பு வளாகம் மூடப்பட்டது. பின்னர் இந்த இடம் தொழில் மற்றும் கல்வி மையமாக உருவனது. படப்பிடிப்பு வளாகத்தின் ஒரு பகுதி உபகரணங்களுடன் 1958 இல் மற்ற தயாரிப்பாளர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. மேலும் 1962 வரை திரைப்பட விநியோகத் தொழிலில் இந்நிறுவனம் ஈடுபட்டுவந்தது.
இன்றைய நாள்
பி. ஆர். நாயுடு குடும்பத்தினர் பல்வேறு தொழில் நடவடிக்கைகளுக்கு இந்த வளாகத்தைப் பயன்படுத்துவதால், பெரும்பாலான ஸ்டுடியோ அமைப்பு இன்னும் அப்படியே உள்ளது. சில கட்டடங்களில் ஆடை உற்பத்தி அலகுகள் மற்றும் சிறிய பட்டறைகள் உள்ளன. 70கள் மற்றும் 80களில் பந்தயக் கார் உருவாக்குநரும் ஓட்டுநருமான எஸ். கரிவர்தன் தனது பந்தையக் கார்களை உருவாக்கவும் சோதனை செய்யவும் இந்த வளாகத்தைப் பயன்படுத்தினார்.
2009 வரை 'சென்ட்ரல் ஸ்டுடியோஸ்' என்ற பெயர் பலகையை இதன் பிரதான நுழைவு வாயிலில் காணப்பட்டது. அண்மையில் 2010ல் புதிய மேம்பாடுகளுக்கு வழி வகுக்கும் வகையில் சில கட்டமைப்புகள் மாற்றியமைக்கபட்டன. 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு, பி. ஆர். நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் ஸ்டுடியோ வளாகத்தைப் பிரித்துக் கொண்டனர். கட்டடங்கள் அப்படியே இருந்தாலும், அணுகு சாலைகள் தனித்தனியாக ஆக்கபட்டன.
14 சனவரி 1958 எஸ். எஸ். வாசன் ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்டை விநியோகஸ்தராகத் தொடங்கினார், விநியோகத்திற்காக திரைப்படங்களைத் தேடிக்கொண்டிருந்தார், கோயம்புத்தூரில் ராவை அழைத்து, அவர் படங்களுக்கு நிதியளித்தால் படத்தை தீபாவளிக்கு சரியான நேரத்தில் முடிக்க முடியுமா என்று கேட்டார்.
10 ஏப்ரல் 1943 பி. கே. இராசா சாண்டோ இயக்குநராக 1942ல் படப்பிடிப்பு தொடங்கியது.ராஜா சாண்டோவுக்கும் தயாரிப்பாளர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடுவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பின்னர் இயக்கத்தை தானே ஏற்றுக்கொண்டார். திரைக்கதை இளங்கோவன். சென்னை மாகாணம் பெரும் வெற்றி பெற்றது.
16 அக்டோபர் 1944 1944 தீபாவளிக்கு வெளியான பெரும் வெற்றிப் படச் சாதனைகளில் ஒன்று, இது 1945 மற்றும் 1946 தீபாவளிகளைத் தாண்டி 110 வாரங்கள் முழுக் காட்சிகளுடன் மெட்ராஸ் பிராட்வே திரையரங்கில் தொடர்ந்து ஓடியது.
13 ஏப்ரல் 1946 முதலில் எம். கே. தியாகராஜ பாகவதர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 1944 இல் லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்கு முன்பு படப்பிடிப்புத் தொடங்கியது. பின்னர், சி. ஹொன்னப்ப பாகவதரைக் கொண்டு அனைத்து காட்சிகளும் மீண்டும் படமாக்கப்பட்டன.
டி. கே. சண்முகம், டி. கே. பகவதி, எம். எஸ். திரௌபதி
கே. வி. சீனிவாசன்
டி. ஏ. கல்யாணம்
23 Apr 1948 கதை, திரைக்கதை ஏ. எஸ். ஏ. சாமி. டி. கே. எஸ். சகோதரர்கள் பாடிய "தூண்டிற் புழுவினைபோல்" பாடலில் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் வரிகள் பயன்படுத்தப்பட்டன. பாரதியின் அனைத்து படைப்புகளுக்கும் காப்புரிமை பெற்றிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பன், டிகேஎஸ் பிரதர்ஸ் மீது உரிமை மீறல் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அப்போதைய மதராஸ் மாநில முதல்வர் ஓ. பி. இராமசாமி ரெட்டியார், பாரதியின் படைப்புகளின் உரிமைகளை வாங்கவும், பதிப்புரிமை அற்றதாகவும் முன்வந்தபோது சிக்கல் முடிவுக்கு வந்தது.
25 பெப்ரவரி 1949 திரைப்படமானது கா. ந. அண்ணாதுரையால் (பிற்கால தமிழக முதல்வர்) எழுதப்பட்டது. அவரது நாடகங்களை அடிப்படையாகக் கொண்ட அவரது இரண்டாவது படம் இது.
02 பெப்ரவரி 1951. எம். ஜி. இராமச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடித்தார். மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து "A" (வயது வந்தவர்களுக்கு மட்டும்) சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் படம். ஜூபிடர் பிக்சர்ஸ் பின்னர் தெலுங்கு மர்மயோகி திரைப்படத்தில் என். டி. ராமராவ் நடித்தார்
28 மே 1954 படத்தின் ஒரு பகுதி சென்ட்ரல் ஸ்டுடியோஸ் மற்றும் சென்னை அடையார் நெப்டியூன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. கா. ந. அண்ணாதுரை முதன்முறையாக திரைக்கதை மற்றும் வசனங்களுக்கு அறிஞர் அண்ணா என புகழ் பெற்றார்.
42
1954
மனசாட்சி
மலையாளம்
கே. எஸ். அகிலேஸ்வரய்யர் (ஈஸ்வர் புரோடக்சன்ஸ்)
"பிரேம் நசீர், பி. பாஸ்கரன், கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், ஹேமலதா, டி. ஆர். ஓமனா, ஜோஸ் பிரகாஷ், பி. ஏ. தாமஸ்
G. Viswanath
S. G. K. Pillai
20 ஆகத்து 1954 அம்மையே காணான் (1963) படத்தின் கதை இந்தப் படத்தைப் போலவே இருந்தது.
5 பெப்ரவரி 1955 நல்ல தங்காள் என்ற தலைப்பில் மற்றொரு படம் மெட்ராஸ் மூவிடோன்ஸ் தயாரித்து அந்த ஆண்டு இறுதியில் வேறு நடிகர்கள் மற்றும் குழுவினருடன் வெளியிடப்பட்டது.