திருவிருத்தம் (நம்மாழ்வார்)பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகிய நூல்களைப் பாடியுள்ளார். இவர் பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் திருமால். இவர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு பாடல்களைப் பாடினாலும் பிற சமயக் கோட்பாடுகளையும் மதித்துப் போற்றியவர். நம்மாழ்வாரின் திருவிருத்தம் கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் ஆனது. நூற்பயன் கூறும் இறுதிப்பாடலையும் சேர்த்து இதில் 100 பாடல்கள் உள்ளன. இவை அந்தாதி முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. அகத்திணையில் வரும் துறையைச் சேர்ந்த பாடல்களாகவே நூல் முழுவதும் அமைந்துள்ளது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி.
இப்படி வளர்ந்துகொண்டே செல்லும் இந்த அக-இலக்கியம் வெறிவிலக்கு (20), தலைவி அன்னத்தை(சோற்றை) வெறுத்தல் (29), தலைவி மேகத்தைத் தூது விடுதல் (31), தலைவனுடன் தன் மகள் சென்ற சுரத்து அருமையை எண்ணி நற்றாய் கவலைப்படுதல் (37), கட்டுவிச்சி குறி சொல்லுதல் (53), தலைவி அன்றில் குரல் கேட்டுப் புலம்புதல் (87) போன்ற செய்திகளுடன் நூல் வளர்கிறது.
ஈனச்சொல் ஆயினும் ஆகுக எறிதிரை வையம்முற்றும் இப்படித் தலைவி சொல்லும் செய்தியோடு நூல் நிறைவு பெறுகின்றது. |
Portal di Ensiklopedia Dunia