தெற்கு கட்டளையகம் (இந்தியத் தரைப்படை)

தெற்கு கட்டளையகம்
தெற்கு கட்டளையகத்தின் சின்னம்
செயற் காலம்1908–தற்போது வரை
நாடு இந்தியா
கிளை இந்தியத் தரைப்படை
வகைஇந்தியத் தரைப்படையின் தெற்கு கட்டளையகம்
அரண்/தலைமையகம்புனே
ஆண்டு விழாக்கள்1 ஏப்ரல் (அமைப்பு நாள்)
தளபதிகள்
தற்போதைய
தளபதி
லெப். ஜெனரல் தீரஜ் சேத்
படைத்துறைச் சின்னங்கள்
கொடி

தெற்கு கட்டளையகம் (Southern Command), இந்தியத் தரைப்படை 7 கட்டளையகங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் புனே நகரத்தில் உள்ளது[1]. இதன் நடப்பு கட்டளைப் படைத்தலைவர் லெப். ஜெனரல் தீரஜ் சேத் ஆவார். பிரித்தானிய இந்திய அரசால் 1908ஆம் ஆண்டில் தெற்கு கட்டளையகம் நிறுவப்பட்டது.

கட்டமைப்பு

தெற்கு கட்டளையகத்தின் கீழ் மகாராட்டிரம், குஜராத், கோவா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மற்றும் கேரள மாநிலங்கள் இருந்தது.[2]2005ஆம் ஆண்டில் தென்மேற்கு கட்டளையகம் நிறுவப்பட்டதால், தெற்கு கட்டளையகத்தின் அதிகார வரம்புகள் மாற்றி அமைக்கப்பட்டது.[3]

தெற்கு கட்டளையகத்தின் கட்டமைப்பு
படையணிகள் தலைமையிடப் படையணிகள் படையணியின் கட்டளை தளபதி

(Corps Commander)

ஒதுக்கப்பட்ட படைபிரிவுகள் படைப்பிரிவின் தலைமையிடம்
12வது பெரும் படையணி (XII Corps)

(கோனார்க் படையணி)

ஜோத்பூர், இராஜஸ்தான் லெப். ஜெனரல் தரைப்படையின் 11வது டிவிசன் அகமதாபாத், குஜராத்
தரைப்படையின் 12வது அதிரடிப் பிரிவு ஜெய்சல்மேர், இராஜஸ்தான்
தரைப்படையின் 75வது தனி பிரிகேட் புஜ், குஜராத்
4வது கவச பிரிகேட் ஜெய்சல்மேர், இராஜஸ்தான்
340வது தன்னாட்சி இயந்திரமயமாக்கப்பட்ட படையணி அஜ்மீர், இராஜஸ்தான்
21வது பெரும் படையணி (XXI Corps)

(சுதர்சன சக்கர படையணி)

போபால், மத்தியப் பிரதேசம் லெப். ஜெனரல் 54வது தரைப்படை டிவிசன் செகந்திராபாத், தெலங்காணா
36வது அதிரடி டிவிசன் சாகர், மத்தியப் பிரதேசம்
31வது கவச வாகன டிவிஷன் ஜான்சி, உத்தரப் பிரதேசம்
41வது பீரங்கிப்படை டிவிசன் புனே, மகாராட்டிரம்
475வது பொறியாளர் பிரிகேட் நசீராபாத், அஜ்மீர், இராஜஸ்தான்
மகாராட்டிரம், குஜராத் மற்றும் கோவா பகுதிகள் மும்பை, மகாராட்டிரம்
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளப் பகுதிகள் சென்னை, தமிழ்நாடு
617வது வான்படை பிரிகேட் புனே, மகாராட்டிரம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Operational Commands of The Indian Army". Archived from the original on 28 February 2010. Retrieved 4 January 2010.
  2. Renaldi and Rikhye, 2011, p. 18
  3. "Southern Command". GlobalSecurity. Archived from the original on 24 January 2016. Retrieved 2016-01-02.

உசாத்துணை

  • Rinaldi, Richard; Rikhye, Ravi (2011). Indian Army Order of Battle. General Data. ISBN 978-0982054178.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya