புதுமைப் பதக்கம்புதுமைப் பதக்கம் அல்லது அற்புதப் பதக்கம்(ஆங்கிலம்: Miraculous Medal; French: Médaille miraculeuse), என்பது கழுத்தில் அணியும், தூய அமலோற்பவ அன்னையின் உருவம் பொதிந்துள்ள ஒருவகை பதக்கமாகும். இதன் வடிவமைப்பு தூய கத்தரீன் லபோரேவுக்கு தூய கான்னி மரியா தாமே காட்சிகள் வழியாக வெளிப்படுத்தியதாக நம்பப்படுகின்றது.[1][2] இதன் முதல் வடிவம் ஆட்ரியன் வாசேத் என்னும் பொற்கொல்லரால் வடிவமைக்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் அடிப்படை நம்பிக்கையில் இது ஒன்றாக ஏற்கப்படுவதில்லை என்றபோதிலும், பல கத்தோலிக்கர்கள் இப்பதக்கத்தை அணிவதால், மரியாவின் பரிந்துரையினால் பல நன்மைகளும் கடவுளின் அருளும் கிட்டுவதாக நம்புகின்றனர்.[1][2] இறக்கும் தருவாயில் கூட ஒருவர் மனம்மாற இப்பதக்கம் உதவும் என நம்பப்படுகின்றது. பதக்கம் அருளப்பட்ட காட்சி1830ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி திருவருகைக்கால முதல் ஞாயிறுக்கு முந்தைய சனிக்கிழமையாகும். அன்று மாலை 5.30 மணிக்கு அருள்சகோதரிகள் அனைவரும் ஆலயத்தில் மாலை செபத்திற்காகக் கூடியிருந்த போது காத்ரீனுக்கு அன்னைமரியா தோன்றினார் என நம்பப்படும் இந்தக் காட்சி 1830ம் ஆண்டுக்கும் 1831ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மேலும் சுமார் ஆறு தடவைகள் இடம் பெற்றது. பதக்கத்தின் அமைப்பு![]() ஆன்னை மரியா உலக உருண்டையின் மீது நின்று கொண்டிருப்பது போன்றும், அவரை சுற்றி முட்டை வடிவத்தில் தங்கநிற எழுத்துகளில் “பாவமின்றி உற்பவித்த ஓ மரியாவே, உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்” என்று எழுதப்பட்டிருக்கும். இதன் பின்புறம் மரியாவைக்குறிக்கும் M மற்றும் யேசுவின் சிலுவை ஆகியவையின் கூட்டுக்குறியும், அதனடியின் மரியாவின் மாசற்ற இதயமும், இயேசுவின் இதயமும் சித்தரிக்கப்படும். இவையனைத்தையும் சுற்றி பன்னிரு வின்மீன்கள் இருக்கும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia