மலேசியாவின் பதினான்காவது மக்களவை, 2018–2023 (மலாய்: Parlimen Malaysia ke-14; ஆங்கிலம்: 14-th Parliament of Malaysia (2018–2023) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பதினான்காவது மக்களவை ஆகும். 14-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 28 ஏப்ரல் 16 சூலை 2018-இல் நடைபெற்றது.[1]2018-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (2018 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பதினான்காவது மக்களவை கூடியது.[2][3]
மக்களவை தலைவராக முகமது அரிப் யூசோப் (13 சூலை 2020 வரையில்); மற்றும் அசார் அசிசான் அருண் தலைமை தாங்கினார்கள். துணை மக்களவைத் தலைவர்களாக முகமட் ரசீத் அசுனோன்; நிகா கோர் மிங் (13 சூலை 2020 வரையில்); அசலினா ஒசுமான் சாயிட் (23 ஆகஸ்டு 2021 வரையில்) பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவர்களாக அகமத் சாகித் அமிடி (11 மார்ச் 2019 வரையில்); இசுமாயில் சப்ரி யாகோப் (24 பிப்ரவரி 2020 வரையில்); அன்வர் இப்ராகீம் பொறுப்பு வகித்தனர்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர்மகாதீர் பின் முகமது அவர்களின் தலைமையிலான பாக்காத்தான் கூட்டணி; 121 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 101 இடங்களைப் பெற்றனர்.[4]
பொது
2018-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மலேசிய மக்களவை தொகுதிகளின் கட்சிகள் அமைவு2022-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை கலைக்கப்படுவதற்கு முன்னர் தொகுதிகளின் கட்சிகள் அமைவு
Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.