வோல்னோவாகா (Volnovakha) உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த தோனெத்ஸ்க் மாகாணத்தின் வோல்னோவாகா மாவட்டத்தின் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 21,441 ஆகும். இந்நகரத்தின் மக்களில் பெரும்பான்மையோர் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் ஆவார். இது நாட்டின் தலைநகரான கீவ் நகரத்திற்கு தென்கிழக்கே 785 கிலோ மீட்டர் தொலைவிலும், தோனெத்ஸ்க் மாகாணத் தலைநகரான தோனெத்ஸ்க் நகரத்திற்கு தென்மேற்கே 68 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
தட்ப வெப்பம்
இந்நகரத்தில் சூன், சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கோடைக்கால வெப்பம் 28 பாகை செல்சியஸ் இருக்கும். நவம்பர், டிசம்பர், சனவரி மாதங்களில் குளிர்கால அதிகபட்ச வெப்பம் - 4.0 பாகை செல்சியஸ் வரை இருக்கும்.
2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது வோல்னோவாகா நகரத்தின் மீது மார்ச் முதல் வாரத்தில் குண்டு வீச்சுகளால் அரசுக் கட்டிடங்களையும், உட்கட்டமைப்புகளையும் தாக்கி அழித்தது. 5 மார்ச் 2022 அன்று இந்நகர மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக உருசியா ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளது. [2]