அதீஸ்சிங் கோயில்
அதீஸ்சிங் கோயில் (Hutheesing Jain Temple) (குசராத்தி: હઠીસિંહનાં દેરા) என்பது குசராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற ஒரு சமணக் கோயில் ஆகும். இது 1848 ஆண்டு கட்டப்பட்டது.[1] வரலாறு![]() இக்கோயிலை கட்ட திட்டமிட்டவர் ஷெட் அதீஸ்சிங் கேசாரிசிங் என்ற அகமதாபாத்தைச் சேர்ந்த பணக்கார வணிகராவார். கட்டுமான வேலை நடந்துவந்த நிலையில் அதீஸ்சிங் இறந்தார். பிறகு அவரது மனைவி சீதனி அர்கோபாய் என்பவரால் கோயில் கட்டுமானம் முடிக்கப்பட்டது. மொத்த செலவு கிட்டத்தட்ட ரூ. 8 லட்சம்[2][3] . அதன் பின்னரும் பெரிய தொகை செலவிடப்பட்டது. இக்கோயில் சமண சமயத்தின் பதினைந்தாம் தீர்தரங்கரான தர்மநாதருக்கு கட்டப்பட்டது ஆகும். இக்கோயில் குசராத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டது. கோவில் கட்டி முடித்த இரண்டு ஆண்டுகளுக்கு திறமையான கைவினைஞர்கள் நூற்றுக்கணக்கானோர்கு வேலை கிடைத்தது.. இந்த கோயில் அதீஸ்சிங் குடும்ப ஆறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. கட்டடக்கலைஇக்கோயில் மிகுந்த கலையரகும், நுண்ணிய சிற்ப வேலைபாடுகளுடன் கட்டப்பட்ட இக் கட்டடம் இரட்டை அடுக்கு கொண்டது. 15 ஆம் தீர்த்தங்கரரின் பளிங்குச் சிலை கருவறாயில் முதன்மையாக உள்ளது. இந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் பன்னிரண்டு அழகுபடுத்தப்பட்ட தூண்கள் ஒரு பெரிய குவிமாடத்தை தாங்கி நிற்கின்றன.[4] இந்த வளாகத்தில் 52 மாடங்கள் அமைந்து உள்ளது. அவை ஒவ்வொன்றுக்கும் அருகில் கடவுள் சிலைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. படக்காட்சியகம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia