நவ்சாரி
நவ்சாரி (Navsari), இந்தியா, குஜராத் மாநிலத்தின் தெற்கு பகுதியில், நவ்சாரி மாவட்டத்தின் நிர்வாகத் தலையிடமும் நகராட்சி மன்றமும் ஆகும். சூரத் நகரமும் நவ்சாரி நகரமும் இரட்டை நகரங்களாகும். நவ்சாரி நகரம் சூரத்திலிருந்து 37 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. பெயர்க் காரணம்பார்சி மக்கள் நவ்சாரி நகரை உருவாக்கினர். பார்சி மொழியில் நவ் என்பதற்கு புதியது என்றும், சாரி என்பதற்கு, பார்சி மக்களின் தாயகமான, பாரசீகத்தில் தாங்கள் முன்பு வாழ்ந்த பகுதியின் பெயரைக் குறிக்கும் வகையில் இந்நகருக்கு நவ்சாரி என்று பெயர் வைத்தனர். நிலவியல்நவ்சாரி நகரம் கடல் மட்டத்திலிருந்து 29 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பூர்ணா ஆறு, நவ்சாரி நகரத்தின் மேற்கில் காம்பத் வளைகுடாவில் கலக்கிறது. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய கோடை காலம், சூன் முதல் ஆகத்து மாதம் முடிய மழைக் காலம், நவம்பர் முதல் பிப்ரவரி முடிய குளிர்காலமாக உள்ளது. அதிக பட்ச வெயில் 104 டிகிரி எஃப்/ 40 டிகிரி செல்சியஸ். ஆண்டு சராசரி மழை பொழிவு 122 செண்டி மீட்டர். இப்பகுதியின் மண் கருமையான கரிசல் மண் வகையைச் சார்ந்தது. துதியா ஏரி மற்றும் சார்பாட்டியா ஏரிகள் நவ்சாரி நகரத்தில் அமைந்துள்ளன. மக்கள் வகைப்பாடுசாளுக்கியர்கள், இராட்டிரகூடர்கள் ஆண்ட நகரம். தற்போது பார்சி மக்கள் அதிகம் வாழும் நகரம். 2001ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகர மக்கட்தொகை 1,34,009.[1] எழுத்தறிவு விகிதம் 76% ஆகும். போக்குவரத்து வசதிகள்அருகில் உள்ள விமான நிலையம் சூரத், நவ்சாரியிலிந்து 30 கி. மீ., தொலைவில் உள்ளது. நவ்சாரி தொடருந்து நிலையம் மும்பை-தில்லி இடையே அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 228 மற்றும் சபர்மதி-தண்டி தேசிய நெடுஞ்சாலை எண் 8, நவ்சாரி நகரத்தின் வழியாக செல்கிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia