பவநகர் மாவட்டம்![]() பவநகர் மாவட்டம் (Bhavnagar district) தென்கிழக்கு குஜராத் மாநிலத்தில், கத்தியவார் தீபகற்பத்தின், சௌராஷ்ட்டிர பகுதியில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டம் 8334 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 800 கிராமங்களும் கொண்டது. பாவ்நகர் மாவட்டத்தின் தலைமையகம் பாவ்நகர். பாவ்நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலிதான சமணர் கோயில்கள் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. பாவ்நகர் மாவட்டத்தின் எல்லைகள்பவநகரைத் தலைமையிடமாகக் கொண்ட, பாவ்நகர் மாவட்டத்தின் வடக்கில் சுரேந்திரநகர் மாவட்டம், வடமேற்கில் ராஜ்கோட் மாவட்டமும், மேற்கில் அம்ரேலி மாவட்டம், தெற்கில் அம்ரேலி மாவட்டமும் காம்பே வளைகுடாவும், கிழக்கே காம்பே வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.[2] மக்கள் தொகை2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாவ்நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை 23,88,291 ஆகும்.[3] மககட்தொகை கணக்குப்படி பாவ்நகர் மாவட்டம், 640 இந்திய மாவட்டங்களில், 133வது இடத்தில் உள்ளது[3] மக்கட்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 288 நபர்கள் வாழ்கின்றனர்.[3] பாவ்நகர் மாவட்டத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 931 பெண்கள் எனும் விகிதத்தில் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி 2001-2011இல் 16.53 விழுக்காடாக குறைந்துள்ளது.[3] எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 76.84 விழுக்காடாக உள்ளது.[3] தொழிலும் வணிகமும்பாவ்நகர் மாவட்டத்தில், வைரக்கற்களை பட்டை தீட்டுதல், மெருகூட்டுதல் மற்றும் விற்பனை செய்யும் தொழில், உப்பளத்தொழில், ”அலாங்” எனும் கடற்கரை நகரில், பயணத்திற்கு தகுதியற்ற கப்பல்கள் உலகின் பெரிய கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் மற்றும் உடைத்த கப்பலிருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு 50 விழுக்காடு மீண்டும் பயன்படுத்தும் வசதி கொண்ட தொழிற்சாலைகள், உரம், சோடா உப்பு, இரும்பு வார்படத் தொழிற்சாலைகள் ஆகியன அதிகமாக உள்ளன. தங்கநகைகள் உற்பத்தி தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் பொருட்களும் நைலான் கயிறு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்
இதனையும் காண்க
வேளாண்மைமுதன்மை பயிர்கள்: நிலக்கடலை, வெங்காயம், பருத்தி, சிறு தானியங்கள் மற்றும் மாதுளை பழம். பாவ்நகர் அரசர்கள்
பாவ்நகர் சமசுதானத்தை சுதந்திர இந்திய அரசுடன் இணைத்தல்1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெரும்வரை, பாவ்நகர் சமஸ்தானம் இராசபுத்திர கோஹில் குல மன்னர்கள் ஆண்டனர். விடுதலைப் பெற்ற இந்தியாவின் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஆன சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பெருமுயற்சியால் 1948ஆம் ஆண்டில் பாவ்நகர் உட்பட இந்தியாவில் இருந்த 565 சுதேச சமசுதானங்கள் இந்திய அரசுடன் இணைக்கட்டது. வரலாறுகோஹில் வமிசம் Gohil Dynasty பாவ்நகர் வரலாற்றுப் பட்டியல் Historical Vignettes பரணிடப்பட்டது 2011-02-05 at the வந்தவழி இயந்திரம்
நகரின் பறவைப்பார்வை படம் Bird's Eye View of the city பரணிடப்பட்டது 2009-10-04 at the வந்தவழி இயந்திரம் நகரின் பழங்கால படங்களும், சித்திரங்களும் Some old pictures/paintings of the city ஒளிக்காட்சிகள் Bhavnagar Ship Scrap Market, video 9:48 min மற்ற செய்திகள்பாவ்நகர் மாவட்ட அறக்கட்டளைகள் Information about charitable as well as non-profit organizations in Bhavnagar – www.bhavnagar.org பரணிடப்பட்டது 2011-06-25 at the வந்தவழி இயந்திரம் பாவ்நகர் மாவட்ட செய்திக் குறிப்புகள் Bhavnagar Information பரணிடப்பட்டது 2009-11-25 at the வந்தவழி இயந்திரம் குடிநீர் வழங்கல் Accuweather.com Bhavnagar 21°46′13″N 72°08′35″E / 21.77028°N 72.14306°E குறிப்புதவிகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia