பனஸ்கந்தா மாவட்டம்
பனஸ்கந்தா மாவட்டம் (Banaskantha district) இந்திய மாநிலமாகிய குஜராத்தில் உள்ளது. இதன் தலைமையகம் பாலன்பூர் நகரில் உள்ளது. இங்கு பாயும் பனாஸ் ஆற்றின் காரணமாக மாவட்டத்திற்கு பனாஸ்காண்டா எனப் பெயரிடப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்னர் இம்மாவட்டத்தின் பகுதிகளை பாலன்பூர் சமஸ்தானம் மற்றும் தாந்தா சம்ஸ்தான மன்னர்கள் ஆட்சி செய்தனர். வரலாறுபுவிப்பரப்புஇது 10,751 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. பரப்பளவின் அடிப்படையில் குஜராத்தின் மூன்றாவது பெரிய மாவட்டமாக உள்ளது. பொருளாதாரம்இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தில் உணவுப் பண்டங்களும், சுற்றுலாத் துறையும், துணி உற்பத்தியும் பெரும்பங்கு வகிக்கின்றனர். சோளம், புகையிலை உள்ளிட்ட பொருட்களை விளைவிக்கின்றனர். எண்ணெய் வித்துக்களை ஏற்றுமதி செய்கின்றனர். வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசின் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [1] பிரிவுகள்இது 12 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துபாலன்பூர், தீசா உள்ளிட்ட நகரங்களில் இருந்து குஜராத்தில் உள்ள பிற நகரங்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் மூலம் ராஜஸ்தானுக்குப் போய் வரலாம். மக்கள் தொகை2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 3,116,045 மக்கள் வாழ்கின்றனர்.[2] சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 296 பேர் வாழ்கின்றனர்.[2] பால்விகிதக் கணக்கெடுப்பில், சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 936 பெண்கள் இருப்பது தெரிய வந்தது.[2] இங்கு வாழ்பவர்களில் 66.39% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia