சோட்டா உதய்பூர் மாவட்டம் (Chhota Udaipur district) இந்தியாவின்குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. 15 ஆகஸ்டு 2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களில் இதுவம் ஒன்றாகும். [1]. சோட்டா உதய்பூர் மாவட்டம் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம் சோட்டா உதய்பூர் நகராகும். [2]. வதோதரா மாவட்டத்தின் ஆறு வருவாய் வட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் உருவானது. [3]
வருவாய் வட்டங்கள்
3436 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சோட்டா உதய்பூர் மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களையும் [4], 6 ஊராட்சி ஒன்றியங்களையும், 894 கிராமங்களையும், சோட்டா உதய்பூர் என்ற ஒரு நகராட்சியும் கொண்டுள்ளது.