அமீர்ப்பூர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்
அமீர்ப்பூர் மாவட்டம் (Hindi: हमीरपुर जिला) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 71 மாவட்டங்களில் ஒன்றாகும். அமீர்ப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகராகும். இம்மாவட்டம் சித்திரக்கூட பிரிவின் கீழ் அமைந்துள்ளது. அமீர்ப்பூர் மாவட்டத்தின் பரப்பு 4,121.9 கி.மீ.². இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,042,374 (2001 கணக்கெடுப்பு). உத்தரப் பிரதேசத்தின் 71 மாவட்டங்களில், 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, மகோபா மற்றும் சித்திரக்கூட மாவட்டங்களுக்கு பிறகு, மூன்றாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் இதுவாகும்.[1] பொருளாதாரம்2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அமீர்ப்பூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[2] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அமீர்ப்பூர் மாவட்டம் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,104,021.[1] இது தோராயமாக சைப்ரஸ் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 417வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 268 inhabitants per square kilometre (690/sq mi).[1] மேலும் அமீர்ப்பூர் மாவட்டம் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 5.78%.[1] அமிர்ப்பூர் மாவட்டம் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 860 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் அமீர்ப்பூர் மாவட்டம் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 70.16%.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia