கோரக்பூர் மாவட்டம்
கோரக்பூர் மாவட்டம் (Hindi: गोरखपुर ज़िला, Urdu: گورکھپور ضلع) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கோரக்பூர் ஆகும். இம்மாவட்டம் கோரக்பூர் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. பொருளாதாரம்2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கோரக்பூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கோரக்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,436,275.[2] இது தோராயமாக குரோவாசியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 40வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,336 inhabitants per square kilometre (3,460/sq mi).[2] மேலும் கோரக்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.69%.[2] கோரக்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கோரக்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.25%.[2] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia