கோண்டா மாவட்டம்
கோண்டா மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின்,75 மாவட்டங்களில் ஒன்று, இதன் தலைநகரம் கோண்டா நகரம் ஆகும். இதன் பரப்பளவு 4448 சதுர கி.மீ ஆகும். சரயு ஆறு இந்தப் பகுதியின் வழியே பாய்கிறது. வரலாறு![]() முற்காலத்தில், இது கோசல நாட்டின் பகுதியாக இருந்தது. ராமனின் ஆட்சிக்குப் பின்னர், அவர் மகன் இலவன் ஆண்டான். [1] சிரவஸ்தி என்ற நகரம் இந்த அரசின் ஆட்சியின்போது தலைநகரமாக விளங்கியது. அண்மைக் காலமாக, புத்தர் கால புதைபொருட்கள் அதிகளவில் கிடைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[2] இப்பகுதியில் இசுலாமியரும், பின்னர் பிரித்தானியரும் ஆண்டனர். சந்திரசேகர ஆசாத் என்னும் விடுதலைப் போராட்ட வீரர் இப்பகுதியில் வாழ்ந்தார், மொழிகள்இங்கு வாழும் மக்கள் அவதி மொழியில் பேசுகின்றனர். இது இந்தியின் வட்டார வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது., [3]. இந்தி மொழியிலும் பேசுகின்றனர். நபர்கள்
சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia