இராமாபாய் நகர் மாவட்டம்
இராமாபாய் நகர் மாவட்டம் (Urdu: رم بی نگار ضلع), (Hindi: रमाबाई नगर जिला), முன்பு கான்பூர் தேகத் மாவட்டம் என அறியப்படும் இம்மாவட்டம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. அக்பர்பூர் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் கான்பூர் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. வரலாறுகான்பூர் மாவட்டம் ஆனது கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக 1977 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு இவ்விரு மாவட்டங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981 ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. 1 சூலை 2010 அன்று உத்தரப்பிரதேச அரசு கான்பூர் தேகத் மாவட்டத்தை இராமாபாய் நகர் மாவட்டம் என பெயர் மாற்ற முடிவு செய்தது.[1] மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இராமாபாய் நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,795,092.[2] இது தோராயமாக காம்பியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 268வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 594 inhabitants per square kilometre (1,540/sq mi).[2] மேலும் இராமாபாய் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.82%.[2]இராமாபாய் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 862 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் இராமாபாய் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.52% .[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia