உன்னாவு மாவட்டம்
உன்னாவு மாவட்டம் இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் உன்னாவு நகரில் உள்ளது. இது லக்னோ கோட்டத்திற்கு உட்பட்டது. பொருளாதாரம்இந்திய மாவட்டங்களில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வளர்ச்சி நிதி வழங்கப்படும். இந்த மாவட்டமும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[1] பிரிவுகள்இது உன்னாவு, ஹசன்கஞ்சு, சபிபூர், பூர்வா, பிகாபூர் ஆகிய வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது பதினாறு மண்டலங்களைக் கொண்டது. அவை: கஞ்சு மொராடஹபாத், பங்கர்மோ, பத்தேபூர், சௌராசி, சபீபூர், மியான்கஞ்சு, ஔராஸ், ஹசன்கஞ்சு, நவாப்கஞ்சு, பூர்வா, அசோகா, ஹிலாவுலி, பிகாபூர், சுமேர்பூர், பிசியா, சிக்கந்தர்பூர் சிரௌசி, சிக்கந்தர்பூர் கரன். மக்கள்தொகை2011 ஆம் கணக்கெடுப்பின்போது, 3,110,595 மக்கள் வாழ்ந்தனர்.[2] சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 682 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.[2] ஆயிரம் ஆண்களுக்கு 901 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[2] இங்கு வாழ்பவர்களில் 68.29% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2] மொழிகள்இங்குள்ள மக்கள் அவாதி மொழியைப் பேசுகின்றனர். இந்த மொழியை 380 லட்சம் பேர் பேசுகின்றனர்.[3] சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia