ஏட்டா மாவட்டம்
ஏட்டா மாவட்டம் (Urdu: ایٹا ضلع, Hindi: एटा ज़िला) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களுள் ஒன்று. ஏட்டா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்த மாவட்டம் அலிகார் கோட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு யாதவ மற்றும் ராஜபுத்திர மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். பொருளாதாரம்2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இந்தியாவின் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக ஏட்டா மாவட்டத்தை அறிவித்தது.[2] இது உத்தரப்பிரதேசத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கு நிதி வழங்குதல் நிகழ்ச்சி (BRGF) மூலம் பணம் பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஏட்டா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,761,152.[1] இது தோராயமாக காம்பியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 272வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 717 inhabitants per square kilometre (1,860/sq mi).[1] மேலும் ஏட்டா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.77%.[1] ஏட்டா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 863 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் ஏட்டா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.27%.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia