ஆக்ரா மாவட்டம்
ஆக்ரா மாவட்டம் (Hindi: आगरा ज़िला, Urdu: آگرہ ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள 70 மாவட்டங்களில் ஒன்று. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ரா இம்மாவட்டத்தின் தலைநகரம். மேலும் இம்மாவட்டம் ஆக்ரா கோட்டத்தின் ஒரு பகுதியாகும். புவியமைப்புஆக்ரா மாவட்டத்தின் எல்லையாக வடக்கில் மதுரா மாவட்டமும், தெற்கில் ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மாவட்டமும், கிழக்கே பிரோசாபாத் மாவட்டமும், மேற்கே ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டமும் அமைந்துள்ளன. ஆக்ரா மாவட்டத்தின் பரப்பு 4027 கி.மீ.². மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஆக்ரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,380,793.[2] இது தோராயமாக மல்தோவா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 41வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,084 inhabitants per square kilometre (2,810/sq mi).[2] மேலும் ஆக்ரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21%.[2] ஆக்ரா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 859 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் ஆக்ரா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.44%.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia