ஹாப்பூர் மாவட்டம்
ஹாப்பூர் மாவட்டம் (Hapur district), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஹாப்பூர் ஆகும். இது மீரட் கோட்டத்தில் அமைந்துள்ளது. ஹாப்பூர் நகரம் தேசிய தலைநகர வலையத்துள் அமைந்துள்ளது. காசியாபாத் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, 28 செப்டம்பர் 2011 அன்று பஞ்சசீல நகர் மாவட்டம் [1] என்ற பெயரில் துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் பெயரை சூலை 2012 அன்று ஹாப்பூர் மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2] ஹாப்பூர் மாவட்டம் ஹாப்பூர், கர்முக்தேஸ்வர், தௌலானா என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.
சமயம்இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவர் மற்றும் இசுலாமிய சமயத்தவர் கூடுதலாகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் குறைவான எண்ணிக்கையிலும் உள்ளனர். மொழிகள்உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருதும், வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia