அம்ரோகா மாவட்டம்
அம்ரோகா மாவட்டம் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இது ஜோதிபா பூலே நகர் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. [2] இதன் தலைமையகம் அம்ரோகா நகரில் உள்ளது. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. [3] இந்த மாவட்டத்துக்கு ஜோதிபா புலே நகர் மாவட்டம் என்ற பெயரும் உண்டு. மக்கள்2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டபோது, 1,838,771 மக்கள் வாழ்ந்தனர். [4] சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 818 பேர் வாழ்கின்றனர். [4] சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 907 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [4] இங்கு வாழ்பவர்களில் 65.7 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [4] அரசியல்இந்த மாவட்டத்தை தனவுரா, நவுகாவான், அம்ரோகா, ஹசன்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது மாநில அரசு.[5] இந்த மாவட்டம் அம்ரோகா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia