இலித்தியம் மெட்டாபோரேட்டு
இலித்தியம் மெட்டாபோரேட்டு (Lithium metaborate) என்பது LiBO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். பயன்கள்இலித்தியம் மெட்டா போரேட்டு அல்லது இலித்தியம் டெட்ரா போரேட்டு (Li2B4O7) அல்லது இவ்விரண்டின் கலவையை போரேட்டு உருக்கிப் பிணைத்தல் மாதிரிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. எக்சு கதிர் உடனொளிர்வு (XRF), அணு உறிஞ்சி நிறமாலைக்காட்டி(AAS), விதிவருநிலை இணைப்பு பிளாசுமா ஒளியுமிழ்வு நிறமாலையியல் (ICP-OES), விதிவருநிலை இணைப்பு பிளாசுமா அணு உமிழ்வு நிறமாலையியல் (ICP-AES), விதிவருநிலை இணைப்பு பிளாசுமா நிறை நிறைமாலையியல் போன்ற ஆய்வுகளுக்குத் தேவையான பல்வேறு மாதிரிகள் தயாரிக்கப் பயனாகிறது. ஒரே நேரத்தில் Cr, As, Cd மற்றும் Pb போன்ற தனிமங்களின் மில்லியனுக்குப் பகுதிகள் நிலையை உறுதிப்படுத்தவும், பிரதான தனிமங்கள் மண்ணில் குறைந்த அளவு கலந்திருப்பதை போரேட்டு உருக்கிப் பிணைத்தல் முறையிலும், முனைவுற்ற கிளர்ச்சிப் பிரிகை அமைப்பு எக்சு கதிர் உடனொளிர்வு நிறமாலையியல் முறையிலும் உறுதிப்படுத்த முடியும்[2]. எங்கெல்லாம் ஆக்சிசன், நேரயனி விகிதவியல் வீதம் (MxOy இல் y/x) ஒன்றைவிட அதிகமாக உள்ளதோ அங்கு இலித்தியம் மெட்டா போரேட்டு SiO2 , Fe2O3 போன்ற அமில ஆக்சைடுகளைக் கரைக்கிறது. இவ்வாறே எங்கெல்லாம் y/x ≤ 1 இருக்கிறதோ அங்கெல்லாம் இலித்தியம் டெட்ராபோரேட்டு CaO, MgO போன்ற கார உலோகங்கள், காரமண் உலோகங்களின் ஆக்சைடுகளைக் கரைக்கிறது. நிறமாலை வேதியியல் பகுப்பாய்வுக்குத் தேவையான பல ஆக்சைடுகள் இலித்தியம் போரேட்டு உப்புகளின் கலவையில் கரைகின்றன[3]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia